முகப் பராமரிப்பு

இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

இயற்கைப்பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் அழகாகவும் பொலிவோடும் இருக்கும்.

இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி?
முகத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இயற்கைப்
பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் அழகாகவும் பொலிவோடும் இருக்கும். ஒவ்வொரு ஃபேஸ் மாஸ்க்கும் ஒவ்வொரு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை உடனடியாகத் தரக்கூடியவையாகும்.

முட்டை ஃபேஷியல் : உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து அதனை முகத்தில் தடவி மாஸ்க் போடுங்கள். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

எலுமிச்சை ஃபேஷியல்: எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து உடனே கழுவிவிட்டு, மென்மையான துணியால் முகத்தை துடைத்து, பின் ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமமானது மென்மையாக மாறும். மேலும் சருமத்தில் உள்ள தூசி, அழுக்கு மறையும்.

கடுகு ஃபேஷியல் : கடுகை பயன்படுத்தும் முன் அதனை கையில் தடவி சோதனை செய்து பின் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சிலருக்கு கடுகு அரிப்பை ஏற்படுத்தும். கடுகு மாஸ்க் செய்யும் போது, கடுகை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கும்.201707311129004119 homemade natural facial SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button