சிற்றுண்டி வகைகள்

டபுள் டெக்கர் பரோட்டா

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு…

கோதுமை மாவு – 1 கப்,
மைதா மாவு – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு.

முதல் லேயர் ஸ்டஃப்பிங்க்கு…

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.

இரண்டாவது லேயர் ஸ்டஃப்பிங்க்கு…

துருவிய பனீர் – 1 கப்,
துருவிய கேரட் – 1/4 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

முதல் லேயர் ஸ்டஃப்பிங்க்கு…
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

இரண்டாவது லேயர் ஸ்டஃப்பிங்க்கு…
பனீர், கேரட், கொத்தமல்லித்தழை, மிளகாய்தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும். மூன்று உருண்டைகளை எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இடவும்.

ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலாவை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி விட்டு பரப்பி மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை சேர்த்து ஒட்டி விடவும்.

இதன் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் பனீர் மசாலாவை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி விட்டு பரப்பி மூன்றாவது சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி சேர்த்து ஒட்டவும். நன்றாக மூடியதும் மாவில் புரட்டி கையால் தட்டி மெதுவாக பெரிய கனமான சப்பாத்தியாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.kEK7R8V

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button