முகப் பராமரிப்பு

முகத்துக்கு ஆவி பிடிக்கலாமா?

இயற்கையான முறையில், சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட எளிய வழி தான் ஆவி பிடித்தல்.

சருமத்தை அழகாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க , சூடான நீரால் ஆவி பிடிப்பது நல்லது.

ஆவி பிடித்தலால் உண்டாகும் நன்மைகள்

ஆவி பிடித்தல் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

ஆவி பிடிப்பதால் சருமத் துளைகள் விரிவடைந்து, அவற்றில் உள்ள அழுக்குகள் விரைவாக வெளியேறும்.

வாரத்துக்கு ஒரு முறையாவது ஆவி பிடிப்பதன் மூலம் முதுமைத் தோற்றத்தை தவிர்க்கலாம்.

சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால், முகம் பொலிவிழந்துவிடும்.

முகத்தில் உள்ள அழுக்குகளை ஆவி பிடிப்பதன் மூலம் வெளியேற்றுவதோடு, ஆவி பிடித்த பின், சுத்தமான துணியைக் கொண்டு முகத்தைத் துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

ஆவி பிடித்தல் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் வெண்புள்ளிகளும் நீங்கிவிடும்.

ஆவி பிடித்தலால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். முகமும் மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வாரத்துக்கு இரண்டு முறை தாராளமாக ஆவி பிடிக்கலாம். அதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை 20 நிமிடங்கள் வரையாவது ஆவி பிடிப்பது சரும அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும், ஏன் மனதுக்கும் கூட நல்லது.
201612201824001568 beauty benefits of boiled water steaming SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button