ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ஊட்டச்சத்து நிபுணர்கள் தவிர்க்க சொல்லும் ஏழு உணவுப் பொருட்கள்!!!

ஃப்ரீ! ஃப்ரீ!! ஃப்ரீ!!! ஆங்கிலேயருக்கு அடுத்ததாய் நமது இந்தியர்களை நிறைய ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வைத்திருப்பது இந்த வார்த்தை தான். அரசியலில் மட்டுமல்ல வாழ்வியலிலும் இந்த “ஃப்ரீ” என்னும் வார்த்தைக்கு நாம் மிகவும் அடிமையாகிப் போயிருக்கிறோம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் சுகர் ஃப்ரீக்கு, காபி பிரியர்கள் காப்ஃபைன் ஃப்ரீக்கு என நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு ஃப்ரீக்கு அடிமைகளாகிக் கொண்டிருகின்றோம். இரசாயனக் கலவைகளின்றி எந்த ஒரு செயற்கை பொருளும் தயாரிக்கப்படுவதில்லை, அது நமது உடல்நல குறைவுக்கு நல்லது அல்ல என்பதை அறிந்தும் அதை விரும்பி உபயோகப்படுத்தும் ஆறறிவு முட்டாள் ஜீவராசிகள் தான் நாம் என்பதில் துளி அளவும் சந்தேகமே இல்லை.

 

எந்த உணவுப் பொருளை உட்கொண்டால் நமது ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதை தெரிந்துக் கொள்வதை போலவே, எந்தெந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் நமது உடலின் ஆரோக்கியம் சீர்கெட்டு போகும் என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். நல்லதை செய்யாவிடினும், தீயதை தவிர்ப்பது உடல் நலனை பாதுகாக்கும் என்ற முறையில் ஊட்டச்சத்து நிபுணர்கள் தவிர்க்க சொல்லும் ஏழு உணவுப் பொருட்கள் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வது அவசியம்….

காராமல் கலர் (Caramel Colour)

உணவுப் பொருள் கலப்பட ஆராய்ச்சியாளர்கள் காராமல் கலர் குறித்து கூறுவது என்னவெனில், ” நாம் உபயோகப்படுத்தும் பல பவுடர் வகை உணவுப் பொருட்களில் வண்ணங்கள் சேர்க்க உபயோகப்படுத்தப்படும் இரசாயனம் தான் காராமல் கலர். இதை கால்நடை உயிரினங்களின் பாகங்களில் இருந்து தயாரிக்கப்படுவதாய் கூறப்படுகிறது. இந்த கலப்பு உள்ள எந்த உணவுப் பொருட்களையும் அதிகம் உபயோகப்படுத்த வேண்டாம்” என்று கூறியிருக்கின்றனர்.

கர்ரெஜ்ஜீனன் (Carrageenan)

பால் வகை உணவுப் பொருட்களில் அதன் அடர்த்தியை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் பொருள் தான் கர்ரெஜ்ஜீனன் (Carrageenan). இது உடலுக்கு நல்லது என இன்று வரை ஊர்ஜிதமாக கூறப்படவில்லை. எனவே, இதன் கலப்பு உள்ள பொருள்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செயற்கை இனிப்பூட்டிகள்

இன்று சந்தையில் கிடைக்கும் செயற்கையான இனிப்பூட்டிகள் பலவும் உங்களது உடல்நலத்திற்கு தீங்கானது. இதனால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் மற்றும் சில தரமற்ற இனிப்பூட்டிகளின் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் (Unsaturated Fats)

செயற்கையில் முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க சேர்க்கப்படுவது தான் இந்த செறிவூட்டப்படாத கொழுப்புகள். இது உங்கள் இதய நோய்கான பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது.

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப்பு – High-fructose corn syrup (HFCS)

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப்பில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பல குளிர் பானங்களில் இது இனிப்பு சேர்ப்பதற்காக பயன்ப்படுத்தப்படுகிறது. இதை தவிர்ப்பது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது.

மோனோ-சோடியம் க்ளுட்டமேட் (Mono sodium Glutamate)

அதிகப்படியான மோனோ-சோடியம் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். மற்றும் நரம்பு தளர்ச்சி, குமட்டல், தலைவலி, மற்றும் இதயத்துடிப்பை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button