சமையல் குறிப்புகள்

சுவையான சில்லி பரோட்டா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

* பரோட்டா – 2

Related Articles

* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* பச்சை குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்

* க்ரீன் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் பரோட்டாக்களை எடுத்து அவற்றை கத்தி பயன்படுத்தி சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட பரோட்டாக்களைப் போடு 2 நிமிடம் பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

Chilli Parotta Recipe In Tamil
* பின் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் சில்லி சாஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.

* இப்போது அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளற வேண்டும். கலவை சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வதக்கி வைத்துள்ள பரோட்டாக்களை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி மீண்டும் கிளறி இறக்கினால், சுவையான சில்லி பரோட்டா தயார்.

குறிப்பு:

* உங்களுக்கு கொத்தமல்லி சேர்க்க பிடிக்காவிட்டால், ஸ்பிரிங் ஆனியனை மட்டும் சேர்க்கலாம்.

* வேண்டுமானால், இறுதியாக சிறிது மிளகுத் தூளை மேலே தூவிக் கொள்ளலாம்.

* விருப்பமுள்ளவர்கள் பரிமாறும் போது மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து பரிமாறலாம். இதனால் சுவை இன்னும் அலாதியாக இருக்கும்.

* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தினால், சில்லி பரோட்டா ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுப்பது போன்று சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும்.

* விருப்பமுள்ளவர்கள் பரோட்டா துண்டுகளை எண்ணெயில் பொரித்து பின் பயன்படுத்தலாம்.

* தற்போது இன்ஸ்டன்ட் பரோட்டாக்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி, அதை தோசைக் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்த பின், அவற்றை துண்டுகளாக்கி பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button