ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.201805071401338449 1 banana. L styvpf

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளது, அதை குறைக்க மாற்ற பழங்களோடு கலந்து சாப்பிடலாம். உதாரணமாக ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.

201805071401338449 1 banana. L styvpf

ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.

அவை மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான ஒவ்வாமைகள் உண்டாக முதன்மையான காரணமான இந்த வாழைப்பழம் சாப்பிடுவது இருக்கிறது.

சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button