மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?

இன்றைய பெண்களில் பலருக்கும் கர்ப்ப காலத்தில் உடல் எடை பிரச்சனை என்பது இருக்கிறது.. ஒரு சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக குறைந்த எடையுடன் இருக்கிறார்கள்.. மேலும் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக அதிக எடையுடன் இருக்கிறார்கள்..

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கும் என்பது பற்றி தெரியுமா? கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவானது தொப்புள் கொடி வழியாக தான் செல்கிறது என்பதால், தாய் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமானதாகும்..

இல்லை என்றால் இது குழந்தையை பாதிக்கும்.. இந்த பகுதியில் பெண்கள் கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார், 12 கிலோ முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். எனவே இதற்காக பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும். உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்..

உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில், 13 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக இவர்கள் சிரமம் பார்க்காமல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல், 7 கிலோ முதல் 11 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

முதன் முதலில் கர்ப்பமடைந்த பெண்கள் தங்களது உடல் எடையை முதல் மூன்று மாதங்களில் 1 கிலோ முதல் 2 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரங்களிலும் அரை கிலோ கிராம் வரையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது அவசியமாகும்.

உங்களுக்கு இரட்டை குழந்தை என்றால், நீங்கள் 16 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரையில் தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான எடையில் இருக்க மாட்டார்கள்.. கர்ப்ப காலத்தில் உடல் எடையானது உங்களது உயரம், எடை, வயது ஆகியவற்றை பொருத்து எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று உங்களது மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார்.

கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில், உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பை விட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14 வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

பத்தாவது வார வாக்கில்தான் ரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும். பதினான்காவது வார வாக்கில் பசி எடுக்கும் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த நேரத்தில்தான் கர்ப்பிணி தான் விரும்பியதை அல்லது அவ்வப்போது கிடைப்பதை சாப்பிட ஆரம்பிப்பாள்.11 1441969355 1beingshortcanaffectyourpregnancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button