சரும பராமரிப்பு

தக. தக. தக்காளி! பள. பள. மேனி

சமைக்கத் தேவைப்படும் அன்றாட பொருட்களில் இடம் பெற்றுள்ளது சிகப்பு நிறம் தக்காளி. சிகப்பும், ஆரஞ்சு வண்ணம் கலந்து, பார்ப்பவரை ஈர்த்து உண்ணத் தூண்டும். பழம் வகைகளில் ஒன்று.
இதன் நிறமும் சுவையும் இதனை சமையலில் சேர்க்கத் தூண்டினாலும் அதன் விலை அவ்வபோது நம்மைப் பயமுறுத்துகிறது. எல்லா ஊர்களிலும், எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படும் பழம். இதிலுள்ள தனிச்சிறப்புகள் நம்மில் பலருக்கு தெரியாது.

தக்காளி பழம் போல் பளபளவென இருக்கிறார் என்று சும்மாவா சொன்னார்கள். தக்காளி அதிகளவில் சாப்பிட்டு வந்தால் மேனி பளபளக்கும். சரும நோய்கள் தீரும். இதை சமையலில் சேர்த்து சாப்பிடுபவர்களின் சருமத்தை, சூரிய ஒளியிலுள்ள அல்ட்ராவைலட் கதிர்கள் பாதிக்காது. உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது.
கல்லீரலில் உண்டாகும் கால்ஸ்டோன்ஸ் என்னும் கற்களை கரைக்கிறது. இருதயத்தை அதிரவைக்கும் கொழுப்பை குறைப்பதுடன், உடலின் ஏற்படும் தொற்று நோய்களை சீர் செய்ய, தக்காளியின் நிகோடினிக் அமிலம் உதவுகிறது.
இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஏ மிகவும் அரிதான சத்துக்கள், ரத்தக்கசிவுகளை கட்டுப்படுத்துகின்றன. தக்காளியிலுள்ள லைகோபீன் என்ற சத்துப் பொருள் கேன்சரால் பாதிக்கப்பட்ட திசுக்களிடமும், தேவையற்ற நச்சுப் பொருட்களிடமும் போராட வல்லது.
வாரத்தில் இருமுறை தக்காளி சேர்த்த உணவு, சாஸ், கெச்சப் சாப்பிட்டால் பிற்காலத்தில், புரோஸ்ட்ரேட் கேன்சரை 20 முதல், 40 சதவிகிதம் தடுக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் சர்விகல் கேன்சர் எனப்படும் கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதுமட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், கருப்பையில் ஏற்படும் எண்டோமெட்ரியல் கேன்சர், சுவாசப்பை புற்றுநோய் ஆகிய நோய்களிலிருந்து தப்பிக்க தக்காளி உதவுகிறது.
மேலும், குண்டாக இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். தினமும், காலைப் வெறும் வயிற்றில் பழுத்த இரண்டு தக்காளிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். ஓரிரு மாதங்கள் சிலிம் ஆகிவிடலாம். இதற்கு காரணம், தக்காளியில் மாவுச் சத்து குறைவாக இருப்பதே. அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது.
தக்காளி வாங்க அலையவேண்டியதில்லை. வீட்டிலேயே தக்காளிக் கழிவுகளை மண்ணில் போட்டால், தானாக செடி வளர்ந்து சீக்கிரம் பழம் கொடுத்துவிடும்.
தக்காளி ஹைப்ரிட் வகையில் விதைகள் இல்லாததால் அவற்றை சமைக்க, சாலட், ஜூஸ் மற்றும் எல்லா உணவுகளிலும் தாராளமாகச் சேர்க்கலாம். நாட்டு தக்காளி புளிப்பு சுவையும், விதைகளும் நிரம்பியது. இதை சமைக்கும்போது, விதைகளை வடிகட்டிய பிறகே சமைக்க வேண்டும். இல்லாவிடில் அவை சிறுநீரகத்தில், குறிப்பாக ஆண்களுக்கு கற்களை உருவாக்கக்கூடும்.E 1479279292

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button