முகப் பராமரிப்பு

சருமத்தை முதல்முறையே கலராக்கும் அத்திப்பழம்…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

அத்திப் பழம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அதில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து இருக்கிறது. ஆண்மைக் குறைவுக்கு மிகச் சிறந்த தீர்வாக இது இருக்கும் என்றெல்லாம் நிறைய படித்திருப்போம். ஆனால் அத்திப் பழம் சரும அழகை மேம்படுத்த எடுத்துக் கொள்ளும் ஒரு பழம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அதிலும் குறிப்பாக, கண்ட கிரீம்களையும் வாங்கிப் போட்டுவிட்டு, காசு போய்விட்டது ஆனால் முகம் கலராகவில்லை என்று புலம்புகின்றவர்கள் கட்டாயம் இதை முதலில் படிக்க வேண்டும்

ஊட்டச்சத்துக்கள் பிரஷ்ஷான பழமாக இருந்தாலும் சரி, உலர்நு்த அத்தியாக இருநு்தாலும் சரி, இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக அதிக அளவிலாக வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து மிக அதிகமாகவே காணப்படுகின்றன.

கரும்புள்ளிகள் முகத்தில் உண்டாகிற கரும்புள்ளிகளை உடனடியாகப் போக்கக் கூடிய ஆற்ல்இந்த அத்திப்பழத்துக்கு உண்டு. இரண்டு அத்திப் பழங்களை எடுத்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் வரையிலும் அப்படியே வைத்திருநு்து பின்னர் முகத்தைக் கழுவி விடலாம். வார்தில் மூன்று முறை இதை தொடர்ந்து செய்து வரலாம்.

ஸ்கிரப் முகத்தில் உள்ள மாசுக்களைப் போக்க ஒரு ஸ்கிரப் போல இதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அதற்கும் இது அற்புதமான பலன்களைத் தரும். அத்திப்பழத்தை பேஸ்ட் போல மைய அரைத்துக் கொண்டு, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறினை விட்டுக் கலந்து, முகத்தில் ஸ்கிரப் செய்து கழுவுங்கள். பலனை உடனடியாகப் பார்ப்பீர்கள்.

சிகப்பழகு அத்திப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால் சூரிய கதிர்வீச்சால் முகம் கருமை அடைந்திருக்கும் சன் டேனை உடனடியாகப் போக்கும். அதோடு மிகச் சிறந்த சிகப்பழகைக் கொடுக்கும். அத்திப்பழத்தை பேஸ்ட் செய்து அதனுடன் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் வரையிலும் அப்படியே வைத்திருந்து விட்டு, பின் முகத்தைக் கழுவ வேண்டும். பின்னர் பாருங்கள் உங்கள் முகத்தில் உள்ள கருமை எப்படி மாறியிருக்கிறது என்று.

டாக்சின் வெளியேற்றும் உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் இரவில் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, பின்னர் காலையில் அதை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால், உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையும் வெளியேற்றப்படும்.

தலைமுடி உதிர்தல் தலைமுடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகச் சிறந்த தீர்வாக அத்திப்பழம் இருக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். அதனால் தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தலைத் தடுக்க முடியும்.

1 1537874701

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button