கர்ப்பிணி பெண்களுக்குஆரோக்கியம்

சிசுவின் அறிவாற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்க…

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் தாய்மையும், அன்பும், காதலும் ஒன்று தான். எல்லா பெற்றோருக்கும் தன் குழந்தை அறிவார்ந்த பிள்ளையாக இந்த சமூகத்தில் வளர வேண்டும், திகழ வேண்டும் என்று தான் ஆசை.

ஆனால், பெற்றோர் செய்யும் தவறு அவர்களது கனவுகளை பிள்ளைகளின் மூளைக்குள் விதைக்க செய்வது. இன்றைய சூழலில் பல பெற்றோர் இதை திருத்திக் கொண்டு அவரவர் கனவுகளில் வாழவிட்டாலும், தன் பிள்ளை அறிவாற்றல் நிறைந்து இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை.

open

கண்டிப்பாக ஊட்டச்சத்து என கூறி விற்கப்படும் பவுடர்களில் இருந்து எந்த பலனும் கிடைக்காது. சமீபத்திய கனடாவின் ஆய்வில் ஒரே ஒரு விஷயத்தை பின்பற்றினால் போதும், சிசுவில் இருக்கும் போதே குழந்தை நல்ல அறிவாற்றல் பெற துவங்கும் என கண்டறியப்பட்டுள்ளது…

கனடா ஆய்வு

கனடாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், கர்ப்பக்காலத்தில் பெண்கள் அதிக அளவில் பழங்கள் சாப்பிடுவதால் சுசுவின் வளர்ச்சி மற்றும் செயற்திறன் அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டது.

ஆய்வகம்

ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கனடியன் சிசு நல ஆரோக்கியம் குறித்து நடத்திய ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளுக்கு ஆறில் இருந்து ஏழு முறை பழங்களை சிறிது சிறிதாக நேரம் வகுத்து உட்கொள்வதால் சிசுவின் ஐ.கியூ ;லெவல் அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டது.

ஆராய்ச்சி

இந்த ஆய்வில், 700 தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை டாக்டர் பியுஷ் மேந்தனே நடத்தினார். சிசு கருவில் ஆரோக்கியமாக வளர பழங்களின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான்.

அறிவாற்றல்

பழங்களின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் சிசுவின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நினைவாற்றலையும் அதிகரிக்கிறது என ஆராய்ச்சியாளர் டாக்டர். பியூஷ் தெரிவித்துள்ளார்.

உட்கொள்ளும் முறை

ஒரு நாளுக்கு ஆறில் இருந்து ஏழு வேளையாக பிரித்து பழங்களை சீரான அளவில் கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டு வருவது சிசுவின் அறிவாற்றல் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது. இந்த ஆய்வறிக்கை E Bio Medicine என்ற ஆன்லைன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button