சரும பராமரிப்பு

நீங்கள் செய்யும் சில தவறுகள்தான் சரும பிரச்சனைகளுக்கு காரணம்!!

ஜிம்மிற்கு சென்று அல்லது சுயமாக வொர்க் அவுட் பண்ணுவது மிக நல்ல விஷயமே. ஆனால் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் உடல் எடையை குறைக்க விடாது. அது போலவே சரும பிரச்சனைகளையும் தரும் என்பது தெரியுமா?

சிலருக்கு திடீரென கட்டிகள் போலவோ அல்லது வேறு வகையான சரும அலர்ஜி உண்டானால் அது உடற்ப்யிட்சியினாலா என சற்று ஆராய்ந்து பார்த்தலும் முக்கியம்.

அப்படி எந்த வகையான பிரச்சனைகள் வொர்க் அவுட் செய்யும்போது வரும் என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

ஜிம்மில் உள்ள சாதனங்கள் :

ஜிம்மில் உள்ள படுத்துக்கொண்டு எழும் உடற்ப்யிற்சி சாதனத்தில் பலரும் வியர்வை பிசுபிசுப்புடன் பயிற்சி செய்வார்கள். அந்த சாதனத்தை சுத்தப்படுத்தாமல் இருந்தால் பலவகையான பாக்டீரியாக்கள் பெருகி சரும அலர்ஜியை உண்டாக்கும்.

வெயிலில் செய்யும் பயிற்சி

வெயில் என்று பாராமல் வியர்க்க விறுவிறுக்க பயிற்சிகள் செய்தால் அதனால் சூட்டுக் கொப்புளங்கள் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். இவை வலியையும் வீக்கத்தையும் தரும். ஆகவே சூரியன் தாக்கம் அதிகம் உள்ள இடத்தில் பயிற்சி செய்யக் கூடாது.

சன் ஸ்க்ரீன் இல்லாமல் பயிற்சி :

அதிகாலை வெயில் நல்லது. ஆனால் 9 மணிக்கு பிறகு புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் பயிற்சி செய்தால் அவை சரும செல்களை பாதிப்படைய வைக்கும். இதனால் உடல் கருத்துவிடும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இறுக்கமான உடை :

ஜிம்மில் பயிற்சி செய்வதற்கன பிரத்யோகமன உடைகள் இப்போது கடைகளில் கிடைக்கிறது. அவற்றை தளர்வாகத்தான் வாங்க வேண்டும். இறுக்கமான உடைகளை அணிவதால் உடல் முழுவதும் பருக்கள் உண்டாகி பாதிப்பை உண்டாக்கும்.

அதிகப்படியான உராய்வு :

மிக அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும்போது சருமம் அதிகப்படியான உராய்வை பெற்று பாதிப்பிற்குள்ளாகிறது. அந்த சமயத்தில் தொடை இடுக்கு, கை, பகுதிகல் ஆகிவற்றில் அலர்ஜி மற்றும் புண் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

சேற்றுப் புண் :

சேற்றுப் புண் எனப்படும் விரல்களுக்கிடையே உண்டாகும் புண்களுக்கு காரணம் பொது குளியலறையில் ஷவரில் குளிப்பதுதான்.

பொது குளியறையில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இவைதான் அமாதிரியான புண்களுக்குன் காரணம். இதனை தவிர்க்க ஷவ்ர் ஷூ அணிவது முக்கியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button