ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…இடது கை பழக்கம் உடையவர்கள் அதி புத்திசாலிகளா?

இடது கை பழக்கம் இருப்பவர்கள் பலரை நாம் நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். அவர்களுடைய நடவடிக்கைகளைக் குறித்து வியந்தும் இருப்போம்! ஏனெனில் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதால் நமக்கு இது வியப்பாக இருப்பதில் சந்தேகமில்லை.

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

அவர்களுடைய பெரும்பாலான அன்றாட செயல்பாடுகளில் அவர்கள் இடது கையையே பயன்படுத்துவார்கள். இவர்களில் சிலர் எழுதுவது, கிரிக்கெட் பவுலிங் போடுவது உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் தங்கள் வலது கையைப் பயன்படுத்துவர். ஆனால், இடது கை பழக்கம் இருப்பதாலேயே அவர்கள் பயங்கர புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். இது உண்மை தானா?

Are Left Handers Geniuses?
இது குறித்து பெரிய பெரிய ஆய்வுகளே நடந்துள்ளன. சிலருக்கு, இடது கை பழக்கம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களுடைய தந்தையின் உயிரணுவில் அல்லது தாயின் கருவில் எழுதப்பட்ட விஷயம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கத்தரிக்கோல் உள்ளிட்ட பல கருவிகளும் வலது கை பழக்கம் உடையவர்களின் வசதிக்காகவே தயாரிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான இடது கை பழக்கமுடையவர்கள் அவற்றை படு சுலபமாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாளுவார்கள்.

இடது கை பழக்கம் உடையவர்கள் பெரும் புத்திசாலிகள் தான் என்பதற்கான சில காரணங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.

அபார நினைவுத் திறன்

Are Left Handers Geniuses?
இடது கை பழக்கம் உடையவர்களின் மூளையில் நினைவுகளைத் தேக்கி வைக்கும் பகுதி, வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்களுக்கு அபாரமான நினைவுத் திறன் இருக்குமாம்! ஒரு குறை என்னவென்றால், இவர்கள் சில சின்னச் சின்ன விஷயங்களை எளிதில் மறந்து விடுவார்களாம்.

கணக்கில் புலி

Are Left Handers Geniuses?
இடது கை பழக்கம் உடையவர்கள் கணிதத்தில் பெரும் புலிகளாக இருப்பார்கள். ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. கஷ்டமான ஒரு கணக்கைக் கொடுத்தால், அதற்கு வெகு எளிதாகவும் குறைந்த நேரத்திலும் அதற்குத் தீர்வு கண்டுவிடுவார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மாபெரும் மேதைகள்

Are Left Handers Geniuses?
வரலாற்றில் நாம் படித்த சில பெரிய அறிஞர்களும், விஞ்ஞானிகளும் இடது கை பழக்கம் உடையவர்களே! உதாரணம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், மேரி க்யூரி, அரிஸ்டாட்டில், ஆலன் ட்யூரிங் ஆகியோர். ஆனாலும், இப்பழக்கத்தினால் தான் அவர்கள் மாபெரும் மேதையானார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அதிகமாக சம்பாதிக்கும் திறன்

Are Left Handers Geniuses?
ஒரே இடத்தில் ஒரே தர வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட படிப்பு முடித்தவர்களில், வலது கை பழக்கம் உடையவர்களை விட, இடது கை பழக்கம் உடையவர்கள் 15% அதிகம் சம்பாதிப்பதாகக் கூட சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது பெண்களுக்குப் பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது.

படைப்பாற்றல் அதிகம்

Are Left Handers Geniuses?
இடது கை பழக்கம் உடையவர்களிடம் அதிகப் படைப்பாற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களுடைய வலது பக்க மூளை அதிகமாகச் செயல்படுவதால் தான், அவர்களால் க்ரியேட்டிவ்வாக சிந்திக்க முடிகிறதாம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button