மருத்துவ குறிப்பு

நீங்கள் பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?அப்ப இத படிங்க!

நீங்கள் பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா?அப்ப இத படிங்க!நீங்கள் ஆசையுடன் ஒரு ஆப்பிளை கடிக்கும்போது கடித்த இடத்தில் இரத்தம் படிந்திருக்கிறதா? அல்லது உங்கள் பற்களை பிரஷ் மூலம் தேய்த்தவுடன் எச்சிலை உமிழும்போது அது சிவப்பாக இரத்தம் கலந்து வருகிறதா? இதற்குக் காரணம் உங்கள் பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தப்போக்கு.

இது நம்மை கவலையில் ஆழ்த்தும். பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வடிவது சாதாரணமான செயல் இல்லை.

பல் ஈறு
பல் ஈறுகளில் இரத்தம் வருவது என்பது ஈறு தொடர்பான நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகவே பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள் ஈறுகளிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும். பல் ஈறுகளில் இரத்தம் வடிவது தொடர்பாக உங்கள் சந்தேகங்கள் மற்றும் அவற்றை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கான எளிய தீர்வுகள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

காரணங்கள்
பல் ஈறுகளில் இரத்தம் வடிவதற்கு கீழே கூறப்பட்டுள்ள காரணங்கள் இருக்கலாம்.

1. ஆரோக்கியமற்ற வாய்வழி சுகாதாரம் கிருமிகளை வாயில் உற்பத்தி செய்து, அவை பல் ஈறுகளில் படிய நேரலாம். உங்கள் ஈறுகளில் படியும் அழுக்கு மற்றும் கிருமிகள் பல் வீக்கத்தை உண்டாக்கி இதனால் பல் ஈறுகளில் அழற்சி மற்றும் இரத்தம் வடியலாம்

2. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு உடலில் இருந்தாலும் பல் ஈறுகளில் இரத்தம் வடியலாம்.

3. ஈறுகளில் உண்டாகும் தொற்று பாதிப்பு காரணமாகவும் ஈறுகளில் இரத்தம் வடியலாம்.

4. கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஹார்மோன் மாற்றத்தாலும் ஈறுகளில் இரத்தம் வடியலாம்

5. மோசமான வாய்வழி சுகாதாரம் என்பது பல் மற்றும் ஈறு தொடர்பான தொல்லைகளுக்கு அடிப்படை காரணமாகலாம்.

6. அதிக அளவு புகையிலை பயன்பாடு, ஈறுகளுக்கு தீங்கை உண்டாக்கலாம். 7. மோசமான உணவுப் பழக்கம் கூட ஈறுகளின் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.

அறிகுறிகள் 1. பற்கள் தளர்த்தல் 2. ஈறுகளில் அழற்சி 3. வாய் துர்நாற்றம் 4. சிலருக்கு ஈறுகளை சுற்றி சீழ் பிடித்தல் 5. பல் ஈறுகளில் வீக்கம்

வீட்டு வைத்தியம் உப்பு நீரில் வாய் கொப்பளித்தல் உப்பிற்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி தன்மை ஆகியவை உண்டு. இது வீக்கத்தைக் குறைத்து , ஈறுகளில் இரத்தம் வடிவதற்கு காரணமான தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்குத் தேவையான பொருட்கள், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் மற்று சிறிதளவு உப்பு. இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து வரலாம்.

தேன் உங்கள் விரலில் சிறிதளவு தேனை எடுத்து பல் ஈறுகளின் மேல் மென்மையாக மசாஜ் செய்யவும். தேன், கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருள் என்பதால், ஈறுகளில் இரத்தம் வடிவதற்கு காரணமான கிருமிகளை அழிக்க உதவுகிறது. தொடர்ந்து உங்கள் பல் ஈறுகளில் தேனை தடவி வரலாம்.

குருதிநெல்லி சாறு இனிப்பு சேர்க்கபடாத குருதிநெல்லி சாறு எடுத்து தினமும் குடிப்பதை வழக்கமாக கொள்ளலாம். குருதிநெல்லியில் பினோலிக் அமிலம் மற்றும் அந்தோசயனின் போன்ற கூறுகள் இருப்பதால் இதற்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. இதனால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் கிருமிகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்

ஆயில் புல்லிங் ஆயில் புல்லிங் என்பது மிகவும் பிரபலமான ஒரு முறையாகும். எண்ணெய்யை வாயில் விட்டு சிறிது நேரம் கொப்பளிப்பதை ஆயில் புல்லிங் என்று கூறுவார். இதனால் பற்களில் இரத்தம் வடிவதற்கு காரணமாக இருக்கும் தொற்று மற்றும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

மஞ்சள் தொற்று பாதிப்புகளைப் போக்க மஞ்சள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் கூறு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டது. இது பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை தடுக்க உதவுகிறது. கடுகு எண்ணெயுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து ஈறுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். கற்றாழை, இஞ்சி, பேக்கிங் சோடா, வேப்பிலை, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு போன்ற அற்புத மூலப்பொருட்கள் கூட ஈறுகளில் இரத்தம் வடிதலைக் கட்டுப்படுத்துபவையாகும்.

ரத்தம் வடிதல் 1. பல் ஈறு அழற்சி மற்றும் பல் ஈறுகளில் இரத்தப் போக்கு போன்றவற்றைத் தடுக்க திரிபலா தேநீர் பருகலாம். திரிபலா கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. இதனால் இரத்தப்போக்கு கட்டுப்படுகிறது. வாயில் திரிபலா தேநீரை வைத்திருப்பது அல்லது இந்த தேநீரால் வாய் கொப்பளிப்பது போன்றவை ஈறு பிரச்சனைகளில் இருந்து சிறந்த தீர்வைத் தரும்.

2. ஒரு கப் ஆரஞ்சு சாறுடன் அரை ஸ்பூன் இயற்கை சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பருகுவதால் பல் ஈறு தொல்லை கட்டுப்படுகிறது.

3. எலுமிச்சை கலந்த நீரை குடிப்பதாலும் இரத்தம் வடிதல் கட்டுப்படுகிறது.

4. ஆப்பிள், பல் ஈறுகளுக்கு சிறந்த நன்மைகளைச் செய்கிறது. உணவிற்கு பின் அரை மணி நேரம் கழித்து ஒரு ஆப்பிளை உட்கொள்வதால் உங்கள் பற்கள் சுத்தமாகி பல் ஈறுகள் குணமடைகிறது. பேரிக்காய் கூட நீங்கள் உட்கொள்ளலாம்.

5. வெறும் வயிற்றில் ராஸ்பெர்ரி பழங்களை இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளலாம். ஆனால் இதனுடன் பால் பொருட்கள் சேர்த்து உண்ணக் கூடாது.

6. பல் ஈறுகள் வலிமை பெற தேங்காய் எண்ணெய் கொண்டு ஈறுகளுக்கு மசாஜ் செய்யலாம்

குறிப்பு மேலே கூறிய இந்த எளிய வீட்டுக் குறிப்புகளைத் தவிர, தினமும் பற்களை பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவுடன் கட்டாயம் பல் துலக்க வேண்டும். பற்களை சுத்தம் செய்யும்போது மென்மையாக செய்ய வேண்டும். இதனால் ஈறுகளில் உள்ள மென்மையான திசுக்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது.

யோகர்ட், க்ரீன் டீ, சோயா, பூண்டு போன்றவை உங்கள் பற்களின் உறுதியை பாதுகாக்க உதவுகிறது. இவற்றை பயன்படுத்தி உங்கள் ஈறுகளை ஆரோக்கியமானதாக வைத்திருக்கலாம். இரத்தம் வடிதலை கட்டுப்படுத்தலாம்

9 1535523097

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button