சரும பராமரிப்பு

ஒரே வாரத்தில் முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். இதற்கு அப்பகுதிகளில் சுருக்கங்கள் அதிகம் இருப்பதால், இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்து, அது அப்படியே தங்கி, அப்பகுதியை கருமையாக்கி விடுகின்றன. அதுமட்டுமின்றி வேறு சில காரணங்களும் உள்ளன. அப்படி உடலில் கருமையாக இருக்கும் பகுதிகள் முழங்கால், முழங்கை, கழுத்து, அக்குள் போன்றவை.

இப்படி கருமையாக இருக்கும் பகுதிகளை வெள்ளையாக்க பலர் கரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டே அக்கருமையைப் போக்கலாம். இங்கு அந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இது எப்பேற்பட்ட கருமையையும் போக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக எலுமிச்சை வழியைப் பின்பற்றிய பின், மறக்காமல் அப்பகுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளரிக்காய் + புளி புளியில் உள்ள அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, முதுமைக் கோடுகளைத் தடுக்கும். வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.

அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 1/2 டீஸ்பூன் புளிச்சாறு சேர்த்து கலந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

வினிகர் + தயிர் வினிகர் மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் புரோட்டீன், பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை தினமும் படுக்கும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பால் + தேன் பால் மற்றும் தேனை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இச்செயலால் கருமை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

கடுகு எண்ணெய் + உப்பு கடுகு எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளது. இவை சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். மேலும் உப்பில் உள்ள அயோடின், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை வெண்மையாக்கும்.

அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 3-5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

22 1471848070 1 lemon

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button