மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்களை முற்றிலுமாக நீக்க கூடிய பண்டைய காலத்து ஆயுர்வேத பானங்கள்…!

நவீன வாழ்க்கை முறையில் நோய்களின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு காரணமாக பலவற்றை நாம் சொல்லலாம். உணவு முறை, வாழ்வியல் மாற்றம், தேவையற்ற பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றை நாம் எடுத்துக்காட்டாக சொல்லி கொள்ளலாம். இவற்றின் தாக்கத்தால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளும் பாதிக்க செய்கிறது.

இதில் முதன்மையான உறுப்பு தான் சிறுநீரகமும். இன்று சிறுநீரக கோளாறால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதில் உருவாகும் கற்களே சிறுநீரகம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. எப்படி இதனை சோளத்தின் நார் மற்றும் வேறு சில எளிய பொருட்களை வைத்து அகற்றி விடலாம் என்பதை இனி அறிவோம்.

கற்கள் எப்படி வருகிறது..?

நமது உடலில் தேவைக்கு அதிகமாக சேர கூடிய எல்லாமே ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில் உடலில் சேர கூடிய ஆக்சலேட் என்கிற மூல பொருள் கால்சியமுடன் சேர்ந்து கால்சியம் ஆக்சலேட்டாக (Calcium Oxalate) மாறி விடுகிறது. இவை தான் கடைசியில் கிட்னி கற்களாக உருவாகி விடுகிறது.

உயிருக்கே உலை..!

கிட்னியில் கற்கள் உருவாகினால் பல்வேறு பாதிப்புகள் வர கூடும். பல சமயங்களில் நமது உயிருக்கே கூட ஆபத்தை தரும். ஏனெனில், இதன் வேலைப்பாடு தடைபடுவதாலே இந்த நிலைக்கு வருகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம் வெளியேற்ற வில்லையென்றால் சிறுநீரகம் பாதிப்படையும்.

உடனடி வைத்தியம் இதுவே..!

உங்களின் கிட்னியில் உள்ள கற்களை நீக்குவதற்கு ஒரு எளிமையான முறை உள்ளது. இதற்கு, ஒரு சிறந்த வைத்திய முறையை நாம் கடைபிடித்தாலே போதும்.

தேவையானவை :-

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

நீர் 1 கிளாஸ்

செய்முறை :-

முதலில் எலுமிச்சை சாற்றையும் ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, இதனை அப்படியே குடித்து விடவும். பிறகு 1 கிளாஸ் நீரை குடிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் கிட்டியின் கற்கள் வெளியேறி விடும்.

சோள நாரின் மகிமை…!

நாம் வேண்டாம் என்று ஒதுக்க கூடிய பல பொருட்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த சோள நாரும். சோளத்தின் நாரை கொண்டு நாம் எளிதில் சிறுநீரக கற்களை நீக்கி விடலாம் என பாட்டி வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்முறை :-

சோள நார் டீயை, இனி இதில் கூறும் குறிப்பை கொண்டு தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு அதில் இந்த நாரை போட்டு கொள்ளவும். சிறிது நிமிடம் கழித்து இதனை வடிகட்டி கொண்டு குடிக்கலாம். மேலும், இந்த டீ சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய வலியையும் குணப்படுத்தி விடுமாம்.

மாதுளை சாறு

மாதுளை உண்மையில் அதிக மருத்துவ நன்மை கொண்ட பழங்களில் ஒன்று. இதனை குடித்து வந்தால் நாட்பட்ட பிரச்சினைகள் பல குணமடையும். குறிப்பாக சிறுநீரக கற்களால் அவதிப்படுவோருக்கு மாதுளை சாறு சிறந்த மருந்து. இதனை தினமும் குடித்து வந்தாலே சிறுநீரக கற்கள் நீங்கி விடும்.

வாழை தண்டு வைத்தியம்…

நம்மில் பலர் இந்த வாழை தண்டை வெறுத்து ஒதுக்குவோம். ஆனால், இதில் தான் ஏராளமான மகத்துவங்கள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த குறிப்பில் கூறுவது போன்று தயாரித்து குடித்தாலே கிட்னி கற்களை வெளியேற்றி விடலாம்.

தேவையானவை :-

வாழை தண்டு 1 கப்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

சிறிது உப்பு

சிறிது நீர்

செய்முறை :-

முதலில் வாழை தண்டை அறிந்து கொண்டு அதனை நீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதே நீருடன் சேர்த்து நன்றாக அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய சாறுடன் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி கொண்டு தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கற்கள் வெளியேறி விடும்.

சீமை காட்டு முள்ளங்கி டீ

இந்த அற்புத டீயை தயாரித்து குடித்து வந்தால் கிட்னியில் கற்களை விரைவில் விரட்டி அடித்து விடலாம்.

தேவையானவை :-

சீமை காட்டு முள்ளங்கி வேர் 1 ஸ்பூன்

தண்ணீர்

செய்முறை :-

முதலில் நீரை நன்றாக கொதிக்க விட்டு, அதில் இந்த வேறை போட்டு கொள்ளவும். 10 நிமிடம் கழித்து இதனை வடிகட்டி குடிக்கலாம். இந்த டீயை ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வரை குடித்து வந்தால் கற்களை நாம் எளிதில் வெளியேற்றி விடலாம்.

செலரி ஜுஸ்

கிட்னியில் கற்களை செலெரி ஜுஸை கொண்டும் நாம் குணப்படுத்தி விடலாம். அதற்கு, செலரியை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். பிறகு இந்த ஜுஸை வெறும் வயிற்றில் 2 அல்லது 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகுமாம்.

முக்கிய குறிப்பு..!

மேற்சொன்ன குறிப்புகளை செய்தும் சிறுநீரக கற்கள் கரைய வில்லையென்றால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். அத்துடன் இந்த குறிப்புகளை உங்களின் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்து கொண்டால் மிக சிறப்பு.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button