மருத்துவ குறிப்பு

பெண்களே நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா என்பதை எப்படி கண்டறிவது?

பெண்களாகிய நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்தான், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நம்மால் மகிழ்ச்சியை அளிக்க முடியும். அதன் மூலம் வீடும், நாடும் வளம் பெறும்.

பெண்களாகிய நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா என்பதை எப்படி கண்டறிவது?
மன அழுத்தம்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

* எதற்கெடுத்தாலும் புலம்புவது.

* தேவையில்லாமல் திடீர் திடீரென்று கோபம்கொள்வது.

* மற்றவர்கள் மீது பழி சுமத்திக்கொண்டே இருப்பது.

* அவ்வப்போது வேலைக்கு லீவுபோடுதல்.

* அடிக்கடி பணிக்கு தாமதமாக செல்லுதல்.

* வேலையில் கவனக்குறைவு.

* உறக்கமின்மை.

* பசியின்மை

* நெருக்கமானவர்களிடம் கூட பேச்சை நிறுத்திக் கொள்வது.

* வழக்கமான பொழுதுபோக்கில் இருந்து விடுபடுதல்.

* அவ்வப்போது தலைவலி.

* எதிலும் விருப்பம் இல்லாமல் இருப்பது.

* மற்றவர்கள் தன்னை பற்றி தவறாகப் பேசுவதாக கருதுவது.

* மற்றவர்களிடமிருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளுதல்.

* கண்டபடி பணத்தை செலவிடுதல்.

* அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்.

* முக்கியமான விஷயங்களைகூட மறந்துவிடுதல்.

* எதையோ இழந்ததுபோல் எப்போதும் கவலையாக காணப்படுதல்!

… இப்படி இந்த அறிகுறிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த மாதிரியான அறிகுறிகளில் நாலைந்து இருந்தால் உங்களையே நீங்கள் சுயபரிசோதனை செய்து பாருங்கள். ‘ஆம் நானும் மன அழுத்தத்தில் சிக்கியிருக்க கூடும்’ என்று நீங்கள் கருதினால், பயம்கொள்ளவேண்டியதில்லை. ‘அதில் இருந்துவிடுபட முடியும்’ என்ற நம்பிக்கையோடு குடும்ப உறவுகளை மேம்படுத்த முயற்சியுங்கள். அலுவலக பணியிலும் அதிக கவனத்தை செலுத்த முன்வாருங்கள்.

உங்கள் மனநலனிலும், உடல் நலனிலும் அதிக அக்கறைகொள்ளுங்கள். யாருக்காகவோ வாழ்கிறோம் என்று நினைக்காமல், உங்களுக்காக நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முன்வாருங்கள். குடும்பம்-வேலைச்சூழல்கள் எப்படி இருந்தாலும் தினமும் இரண்டு மணி நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். உங்கள் பிரச்சினைகள், கவலைகள், எண்ணங்கள் போன்றவைகளை நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான மகிழ்ச்சி, அமைதி, திருப்தி போன்றவைகளை தர உங்களுக்கு நெருக்கமானவர்களால் மட்டுமே முடியும். அது உங்கள் மனபாரத்தைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.

பயமும், கவலையும் உங்களிடம் அதிகம் இருக்கிறது என்றால், உங்களிடம் தன்னம்பிக்கை குறைந்திருக்கிறது என்று அர்த்தம். தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் வழிமுறைகளைத் தேடுங்கள். அதற்கு யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவை உதவும். தியானத்துடன் கூடிய மியூசிக் தெரபியும் கைகொடுக்கும். அவைகளுக்கு நேரம் ஒதுக்கி முழுமனதோடு ஈடுபடுங்கள்.

நாம் பெண்களாக பிறந்தது பெருமைக்குரிய விஷயம். மனித இனத்தை உருவாக்கும் படைப்பு என்கிற மிகப்பெரிய ஆற்றலை, இயற்கை நம்மிடம் தந்திருக்கிறது. குழந்தைகளை உருவாக்கி அவர்களை முறையாக வளர்த்து, வழிகாட்டியாக இருக்கவேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்காக நாம் மகிழவேண்டும். பெண்களாகிய நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்தான், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நம்மால் மகிழ்ச்சியை அளிக்க முடியும். அதன் மூலம் வீடும், நாடும் வளம் பெறும். அதனால் ஒவ்வொரு பெண்ணும் பயத்தையும் கவலையையும் கைவிட்டு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ முன்வர வேண்டும்.

-Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button