பழரச வகைகள்

செம்பருத்தி பூ சர்பத்

தேவையான பொருட்கள் :

செம்பருத்தி பூ இதழ்கள்-200 கிராம்
ஏலக்காய்-10 (தூளாக்கவும்)
அதிமதுரம் தூள் -1 தேக்கரண்டி
சுக்கு தூள்-1 தேக்கரண்டி
ஜாதிக்காய்-2 (தூளாக்கவும்)
வெல்லம்-500 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை:

* செம்பருத்தி பூவை அரை லிட்டர் நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுங்கள். அத்துடன் வெல்லத்தை கலந்து கொதிக்க வையுங்கள். நன்கு கொதிக்கும்போது தூள் வகைகளை கலந்திடுங்கள். கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின்பு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.

* இதில் 2 தேக்கரண்டி எடுத்து, 100 மி.லி. நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடலில் அதிகரித்த சூடு நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீரும். மார்பு வலி மற்றும் இதய பலவீனத்திற்கும் இது சிறந்த மருந்து.

5e4437b8 70b2 4508 8013 884b2ae0566d S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button