அழகு குறிப்புகள்

பாதங்கள் பளபளக்க வேண்டும் என்று செய்யும் இந்தப் பராமரிப்பு உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும்…..

உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும் .. ஆனால் ஆரோக்கியமாக இருந்தால் தானே அழகும் சாத்தியமாகும்… அதிகப்படியான பணியில் உடலும் மனமும் சோர்ந்து போகாமல் இருக்க சத்தான உணவுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளடைவில் குறைபாடுக்குள்ளாகும் ஆரோக்கியம் சருமத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதே உண்மை.

கணினிப் பணியில் இருப்பவர்கள் முக்கியமாக கண்ணைப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் கண்களுக்கு கீழ் கருவளையம் உண்டாகும். ஆரோக்கியம் தவிர்த்து அழகுக்காக செய்யப்படும் எந்த சிகிச்சையும் பலனைதராது என்பதை உணரவேண்டும். முக்கியமாக பாதங்களைப் பராமரிப்பதில் சுணக்கம் காண்பிக்க கூடாது.

foot

வெளியில் சென்று திரும்பும் நம்மோடு கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதிகம் ஒட்டி வருவது பாதங்களில்தான். பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே பெரும்பாலான நோய் குறைபாடுகள் தவிர்க்கப்படும். நீரிழிவு நோயாளிகள் பாதங்களைப் பராமரித்தால் நோயின் பின்விளைவுகள் தாக்காமல் தப்பிக்கலாம்.

பாதபராமரிப்புக்கு அதிக விலைகொண்ட க்ரீம் பூச்சுகளும்… பார்லர் உயர் சிகிச்சையும் தேவையில்லை. அன்றாடம் பத்து நிமிடங்கள் செலவழித்தாலே போதுமானது. இரவு படுக்க செல்வதற்கு முன்பு வாயகன்ற பாத்திரத்தில் வெது வெதுப்பான நீரை விட்டு.. அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து பாதங்களை வைத்திருங்கள்… கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும்…

நான்கு நாட்கள் இப்படி செய்த பிறகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் நாரை வாங்கி பாதங்களை நீரில் நனைத்து மென்மையாக விரல் இடுக்கு, பாதங்கள் சுற்றி எல்லா இடங்களிலும் தேய்த்து விடுங்கள்… பிறகு பாதங்களை ஈரம் போக துடைத்து நல்லெண்ணெயை இலேசாக சூடு செய்து விரல்களில் நனைத்து பாதம் சுற்றி நன்றாக மசாஜ் செய்வது போல் மென்மையாக தேயுங்கள்… உடல் முழுவதும் சீரான இரத்த ஓட்டம் வேகமாக பரவி உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

பித்த வெடிப்பு இருப்பவர்கள் மருதாணி, வேப்பிலை, கிழங்கு மஞ்சள் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் வெடிப்புகள் மறையும். வெளியில் செல்லும் போது தேங்காய் எண்ணெயைப் பாத வெடிப்புகளில் தடவினால் வெடிப்புகள் மேலும் பாதிப்புக்குள்ளாகாது.

பாதங்கள் பளபளக்க வேண்டும் என்று செய்யும் இந்தப் பராமரிப்பு உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button