வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்க இதை செய்யுங்கள்!…

நம்மில் பெரும்பாலானோருக்கு வெயில் காலங்கள் மட்டுமல்லாது பிற காலங்களிலும் ஏற்படும் வாய்ப்புண் பிரச்சனை மற்றும் வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவதியுற நேரிடும்.

வாய்ப்புண் நமக்கு ஏற்பட்டால் சிறிதளவு நீரை கூட குடிக்க முடியாமல் ஏற்பட்ட தவிப்பை வாய்ப்புண் ஏற்பட்டால் மட்டுமே அறிந்திருக்க இயலும்.

அந்த வகையில்., வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்துவதற்கு தயாரிக்கப்படும் அகத்திக்கீரை சாற்றை செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.

தேவையான பொருட்கள்:

அகத்திக் கீரை – ஒரு கைப்பிடியளவு.,
வெள்ளைப் பூண்டு – 5 பற்கள்.,
தேங்காய்ப்பால் – 200 மிலி.,
மிளகுத்தூள் – 3 தேக்கரண்டி.,
தேன் – 3 தேக்கரண்டி…
செய்முறை:

எடுத்துக்கொண்ட கீரையை முதலில் நன்றாக சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு., அதனுடன் மிளகுத்தூள் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து அரவை இயந்திரத்தில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

இந்த அகத்திக்கீரை சாற்றை வாரத்திற்கு சுமார் மூன்று நாட்கள் என்ற கணக்கில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகி வந்தால் நாள்பட்ட குடற்புண் பிரச்சனை., வயிற்றுப்புண் பிரச்சனை மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்ற பிரச்னையை நீக்கும்.

Leave a Reply