ஆரோக்கியம்

மாதவிடாய் நேர வலியை குறைப்பதற்கு எளிய முறை.!!

பொதுவாக பெண்கள் வயிற்று வலி மற்றும் வயிற்று உபாதையின் காரணமாக பாதிக்கப்படாமல் தங்களின் வாழ்க்கையை கடந்திருக்க போவதில்லை., மாதத்தின் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை நிகழும் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும்., துன்பத்தையும் விலக்குவதற்கு வார்த்தைகள் போதாது.

mathavidai

சுமார் 30 வருடங்களுக்கு முன்னதாக பெண்கள் மாதவிலக்கு காலங்களில் வயது வித்தியாசமின்றி கட்டாயமாக வீட்டு மற்றும் பிற வேளைகளில் இருந்து ஓய்வுகளை பெற்று வந்தனர். இதனை சில சமூக நலவா(வியா)திகள் பெண் அடிமைத்தனம் என்று கூறி அவர்களின் உடல் ஓய்விற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்களின் உடல் ஆற்றலானது குறைந்திருக்கும் என்ற காரணத்தாலும்., மாதவிடாய் சுழற்சியானது அந்த மூன்று முதல் ஏழு நாட்களில் எந்த நேரமும் ஏற்படலாம் என்ற காரணத்தாலும் அவர்களை அன்றாட பணியில் இருந்து விலக்கி உடல் மற்றும் மனதிற்கு ஓய்வை வழங்கினர்.
பெண் தனது பருவ வயதை எட்டியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் கருப்பையில் கருமுட்டைகள் உருவாகி., கருவடையாத கருமுட்டைகள் இரத்தம் போன்று பிறபுறுப்பின் வழியாக வெளியேறிவிடும். இந்த சமயத்தில் சிலருக்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படும்.

இதன் காரணமாகவும்., இயற்கையாகவும் பெண்களுக்கு அடிவயிறு பகுதியில் கடுமையான வலியானது உண்டாகும்., இதன் காரணமாக ஏற்படும் கடுமையான வலியை அடுத்து., படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத மற்றும் உணவையும் சாப்பிட முடியாமல் படுக்கையிலேயே இருப்பார்கள்.

இந்த வலியை குறைப்பதற்கு மற்றும் இரத்த போக்கின் மாதவிடாய் அசெளகரியத்தை குறைப்பதற்காக சோடா மற்றும் வாயு உள்ள குளிர்பானத்தை அருந்தும் பழக்கத்தை பெரும்பாலான பெண்கள் வைத்துள்ளனர். இந்த செயலானது வலி ஏற்பட்டுள்ள சமயத்தில் உடலுக்கு மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சியை வழங்கினாலும்., உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

இந்த சமயத்தில் சில பெண்கள் மருத்துவரின் எந்த விதமான ஆலோசனையும் இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்., அது தொடர்கதையாகும் நேரத்தில் நாளடைவில் சில பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதே உண்மையாக உள்ளது. மாத்திரைகள் இல்லாமலேயே மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை வெகுவாக குறைக்கும் நடைமுறைகளும் உள்ளது.

மாதவிடாய் நாட்களுக்கு முன்னதாக நடைப்பயிற்சி மற்றும் படிகளில் ஏறி இறங்குவதால் உடலுக்கு வலுவானது கிடைக்கிறது. மேலும்., குனிந்து நிமிர்ந்து வேலை செய்து வந்தால் உடலுக்கு நல்லது. உடற்சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிகளை குறைப்பதற்கு வாரத்திற்கும் ஒருமுறை எண்ணெய்யை தேய்த்து குளிக்க வேண்டும்.

தற்போதுள்ள கால நிலையில் பெண்கள் பல்வேறு துறையில் ஓய்வின்றி பணியாற்றி வரும் காரணத்தில் தலைவலி., இடுப்புவலி மற்றும் மன உளைச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாகவே அன்றைய காலத்தில் பெண்களின் மாதவிடாய் நேரத்தில் அவர்களுக்கு ஓய்வை அளித்து வந்தனர்.

தலைவலி., இடுப்புவலி மற்றும் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு எலுமிச்சை சாறில் உப்பை சேர்த்து குடித்து வருதல் மற்றும் தேநீர் போன்ற பொருள்களில் வெள்ளை (உடலுக்கு கேடு தரும்) சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். தினமும் உறங்குவதற்கு முன்னதாக வெந்தயத்தை ஊறவைத்து., காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு குடித்து வருதல் வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து மூன்று மாதங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் நாள்பட்ட மாதவிடாய் வலியும் நீங்கும்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button