ஆரோக்கிய உணவு OG

தினை உப்புமா

தேவையான பொருட்கள்:

* தினை – 1/2 கப்

* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1-2 (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் – 1

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பாசிப்பருப்பு – 1/2 டீஸ்பூன்

* சிறிய கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் – 5-6 (பொடியாக நறுக்கியது)

* பச்சை பட்டாணி – 1/2 கப்

* தண்ணீர் – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் தினையை நீரில் 2-3 முறை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* கடுகு நன்கு வெடித்ததும், அதில் சீரகம், உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அதன் பின் அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

Quinoa Upma Recipe In Tamil
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் கழுவிய தினையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அடுத்து ஒரு மூடியைக் கொண்டு வாணலியை மூடி வைத்து, தினையை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

* நீரானது நன்கு வற்றி தினை நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, உப்புமாவின் மேல் கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான மற்றும் சத்தான தினை உப்புமா தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button