முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ் ! எலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்…!

எலுமிச்சை சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம். எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பலவித நன்மைகளை வழங்கும். ஆனால் இந்த எலுமிச்சை அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது அல்ல. எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து, அடிக்கடி பருக்கள் வருவதைத் தடுக்கும்.8384002819527f9a7a1a8cc9b362b5c2df43c7d0 1447792025எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறந்த செல்களை நீக்க எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால், அதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை உதவி புரியும். அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், எண்ணெய் சுரப்பு குறையும்.முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருந்தால், அதனைப் போக்க சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும்.இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும். ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button