மருத்துவ குறிப்பு

சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ குணங்கள் – தெரிந்துகொள்வோமா?

சப்பாத்திக் கள்ளி அல்லது சப்பாத்துக் கள்ளி என்று சொல்லப்பெறும் ஓர் வகை முள் செடி. இதன் பூக்கள் பெரியவை. பூக்கள் மஞ்சள் நிறமுடையவை, அடித்தண்டு சதைப் பற்றுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் மிருதுவான இது வளர வளர கெட்டிப்படும். நவீன ஆய்வாளர்கள் சப்பாத்திக் கள்ளிக்கு குடிநீரைச் சுத்திகரிக்கும் தன்மை உண்டு என்கின்றனர்.

சப்பாத்திக் கள்ளியின் சதைப் பகுதியைப் பசையாக்கி மாசற்ற நீரில் கலந்து வைத்துப் பரிசோதித்ததில் நீரில் கலந்திருந்த நச்சுக்கள், மாசுப் பொருட்கள், நுண் கிருமிகள் அனைத்தும் அடியில் சென்று தங்கி நீர் தெளிவானதைக் கண்டனர். இதனால் 98% அளவுக்கு நீர் சுத்தமானது தெரியவந்தது. இதுபோலவே சிறிதளவு சப்பாத்திக் கள்ளியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த நீரை சுத்திகரிக்க வேண்டிய நீருடன் கலந்து வைப்பதாலும் மாசுக்கள் அடியில் தங்கி சுத்தமான, பருகத்தக்க நீர் கிடைக்கும். இது மிகவும் சிக்கனமான, எளிதான நீரைச் சுத்திகரிக்கும் முறையாக விளங்கும்.

இலைகள் மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். இதைப் பசையாக்கி மேல் பற்றாகப் பயன்படுத்துவதால் உஷ்ணம், வீக்கம் ஆகியன விலகிப் போகும். சப்பாத்திக் கள்ளியின் பழங்களை நெருப்பிலிட்டு வதக்கிக் கக்குவான் இருமலுக்குக் கொடுக்க குணமாகும். சப்பாத்திக் கள்ளியின் பூக்களைப் புதிதாகவோ அல்லது காய வைத்து உலர்த்தியோ பயன்படுத்துவதால் அது வற்றச் செய்வதற்காகவும், குருதியை உறையச் செய்வதற்காகவும் பயன்படும். இதை உள்ளுக்குப் பயன்படுத்துவதால் வயிற்றை நோகச் செய்து அடிக்கடி மலம் கழிக்க வேண்டி வரும் உணர்வு, குடற் பகுதியில் சேரும் சளித்தன்மையால் ஏற்படும் வலி, புரோஸ்டேட் கோள சுழற்சி ஆகிய நோய்கள் குணமாகும். சப்பாத்திக் கள்ளி ஓர் சத்தூட்டமுள்ள உணவாகப் பயன்படுகின்றது.

இது அதிகமான நார்ச்சத்து (பைபர்) உடையதாகவும், புத்துயர்வு தருவதாகவும், “கரோட்டின்” என்னும் மருத்துவ வேதிப் பொருளை மிகுதியாகப் பெற்றுள்ளதாகவும் விளங்கு கிறது. சப்பாத்திக் கள்ளியை முழுவது மாகவே உணவுக்குப் பயன்படுத்தலாம். இதனுடைய இலைப் பகுதி, பூக்கள், தண்டுப் பகுதி மற்றும் பழங்கள் ஆகியனவற்றைச் சமைத்தோ அல்லது சாறு பிழிந்தோ உள்ளுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இதை உணவாகப் பயன்படுத்துவதால் கொழுப்புச் சத்து குறைவது மட்டுமின்றி சீரண உறுப்புகள் பலம்பெற்று சீராக இயங்க வழியேற்படுகிறது.

சிலவகைப் புற்றுநோய்கள் வராத வண்ணம் தடைப்படுத்தப்படுகின்றது. மேலும் மறதி நோயான “அல்ஸிமா” என்னும் நோயைப் போக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், உடல் முழுவதிலுமான வீக்கத்தைக் குறைக்கவும் சப்பாத்திக் கள்ளி மருந்தாகிப் பயன் தருகின்றது. ஒருமுறை சப்பாத்திக் கள்ளியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான விட்டமின் ‘சி’ சத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அதனின்றி கிடைக்கப் பெறுகிறோம்.

இது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் இன்றியமையாதது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆவதற்கு இது உறுதுணையாகிறது. மேலும் இந்த விட்டமின் ‘சி’ சத்து எலும்பு மற்றும் தசை பகுதிகள் உற்பத்திக்கும் துணை நிற்கிறது. சப்பாத்திக் கள்ளியில் உள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) எலும்புகள் உருவாகும் பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் பல்வேறு பல் சம்மந்தமான நோய்கள், எலும்பு, சம்மந்தமான நோய்கள் தவிர்க்கப் பெறுகின்றன.

சப்பாத்திக் கள்ளியில் உள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கு வகை செய்கிறது. இந்த நார்ச்சத்து குடல் பகுதியில் உள்ள மலத்தை ஒன்று திரட்டி வெளித்தள்ள உதவுகிறது. இதனால் மலச் சிக்கல் தவிர்க்கப்படுகிறது. வயிறு உப்பிசம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள இயலுகிறது. இதனால் குடல் புண் (அல்சர்), மலக்குடல் புற்று தடுக்கப்படுகின்றது. சப்பாத்திக் கள்ளியினின்று பெறப்படும் நார்ச்சத்து உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புச் சத்தைக் கரைத்து வெளியேற்ற வழி செய்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் சத்து ரத்த நாளங்களின் சுழற்சியைப் போக்கி ரத்த ஓட்டத்தை சீர் செய்து ரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் பாதுகாக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு தவிர்க்கப் பெறுகிறது. மேலும் மாரடைப்பு போன்றவையும் தடுக்கப்படுகின்றது. சப்பாத்திக் கள்ளியில் அதிக அளவிலான பளேவனாய்ட்ஸ்”, “பாலிபினால்ஸ்” மற்றும் “பெட்டாலைன்” ஆகிய வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

இவை உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு எங்கேனும் தங்கி புற்றுநோய் உண்டாகக் காரணமாகும் நச்சுக்களை வெளியேற்றும் பணியில் பெரும் பங்குவகிக்கின்றன. இதனால் புற்று நோய் தவிர்க்கப் பெறுகிறது. மேலும் இவை தோலினுடைய ஆரோக்கியத்துக்கும், இளமையில் ஏற்படும் முதுமையை தடுப்பதற்கும், ஆண்களின் பார்வை தெளிவு படுவதற்கும், மூளையின் செயல்பாடுகள் மேம்படுவதற்கும், மறதி நோய் எனப்படும் ‘அல்சிமர்” நோயை தடுப்பதற்கும் உதவுகின்றன.
416b0753 8157 4e59 9cae e0c45b125549 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button