ஆரோக்கியம் குறிப்புகள்

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

எமது உடம்பே எமது வைத்தியர் என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆம், எமது உடம்பில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழும் பட்சத்தில் அதற்கேற்றவாறு எமது உடலும் நடந்து கொள்ளும். மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு எமது உடல் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் எமது உடலில் ஏதேனும் ஒன்று சரிவர நடைபெறாதவிடத்து அது தொடர்பில் எமது உடல் சமிஞ்சை செய்யும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் அவற்றை கவனத்திற் கொள்ள வேண்டும்.

அதுசரி, எவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் உடல் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

01. கண்ணின் கருவிழிப் படலத்தைச் சுற்றிலும் சாம்பல் நிற வளையங்கள் போன்று தோன்றுதல் என்பது பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும். இது சாதாரணமானது தான். எனினும் இளவயதிலேயே ஒருவருக்கு இவ்வாறு ஏற்படுமாயின் அவரது கொலஸ்ரோல் மட்டம் அதிகம் எனப் பொருள்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் வைத்தியரை நாடுதல் அவசியம்.

02. நகங்கள் மற்றும் தலை முடி என்பன இலகுவில் உடையும் தன்மையுடையதாக இருப்பின் உடம்பில் விட்டமின்-பி சத்து பற்றாக்குறையாக உள்ளது என அர்த்தம். இது போன்ற சந்தர்ப்பங்களில் அதிகளவு பால் பருக வேண்டும். அத்துடன் காளானை உணவுடன் சேர்த்துக் கொள்வதும் சிறந்தது.

03. பல் ஈறுகளில் திடீரென இரத்தம் வடிதல் மற்றும் பல் துலக்கும் போது இரத்தம் வடிதல் என்பன ஏற்படின் உடம்பில் விட்டமின்-சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று பொருள். இது போன்ற சந்தர்ப்பங்களில் சிட்ரஸ் உள்ள பழங்கள், பசளை, பச்சைத் தாவரங்கள், கிழங்கு, கோவா, கோலி பிளவர் மற்றும் புரொக்கோலி என்பவற்றை உட்கொள்ள வேண்டும்.curled toes

04. ஐஸ்கட்டியை உண்ண வேண்டும் என்றது போலொரு உணர்வு ஏற்படின் இது இரத்த சோகை ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தின் போது இரும்புச் சத்து அதிகளவில் உள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். மாட்டிறைச்சி மற்றும் முட்டை என்பன சிறந்தவையாகும்.

05. அடிக்கடி இனிப்புச் சுவையை உட்கொள்ள வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டால் நீங்கள் மனஅழுத்தம் மற்றும் அதிகபடியான சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனப் பொருள்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் டார்க் சொக்லெட் சாப்பிடுவது அல்லது தேன் அருந்துவது சிறந்தது.

06. தூக்கமின்மை மற்றும் கால்களில் திடீரென தசைப்பிடிப்பு என்பன ஏற்படுமாயின் உங்களது உடலில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் என்பன அதிகளவில் உள்ளது எனப் பொருள்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் தக்காளி, ஒரேஞ்ச், வாழைப்பழம் மற்றும் பசளைக்கீரை போன்றவற்றை உட்கொள்வது சிறந்தது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button