ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?

கால்சியம் மிகவும் முக்கியமான சத்து என்பது அனைவருக்கும் தெரியும்.

உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது. ஒருவரது உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். அதில் இக்குறைபாட்டினால் ஏற்படக்கூடிய பலருக்கும் தெரியாத ஓர் பிரச்சனை தான் பாலியல் நாட்டம் குறைவது.

பொதுவாக உடலுறவில் ஈடுபட விருப்பம் குறைந்தால், நாம் அதற்கு காரணமாக மன அழுத்தம், மன இறுக்கம், விறைப்புத்தன்மை பிரச்சனை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், மருந்துகள், உறவுகளில் உள்ள பிரச்சனை போன்றவற்றை தான். ஆனால் கால்சியம் குறைபாடும் உடலுறவில் உள்ள நாட்டத்தைக் குறைக்கும் என்பது தெரியுமா?

gfdhgd 1

நமது உணவுகளில் போதுமான கால்சியம் சத்து இல்லாவிட்டால், அது எரிச்சலுணர்வு, தலைவலி மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற பல அறிகுறிகளை வெளிக்காட்டி, பாலியல் இயக்கத்தையும் பாதிக்கும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர் போன்றவற்றை அவசியம் சேர்க்க வேண்டும்.
உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?
உடலுறவில் கால்சியத்தின் பங்கு

கால்சியம் என்பது உங்கள் ஹார்மோன் சுரப்பிகளுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பை நிறுவுவதற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது உடலின் இயந்திர செயல்முறையின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணம். கால்சியத்தைத் தவிர, உறவின் போது விறைப்புத்தன்மையை நீடிப்பதில் கால்சியத்தின் பாதகமான விளைவை எதிர்கொள்ள போதுமான அளவு மெக்னீசியத்தையும் உடலில் கொண்டிருக்க வேண்டும். எப்போது ஒருவரது உடலில் கால்சியம் அல்லது மக்னீசியத்தின் குறைபாடு ஏற்படுகிறதோ, அப்போது பாலியல் நாட்டம் குறையும்.

எரிச்சலுணர்வு

கால்சியம் குறைபாட்டின் ஓர் அறிகுறி தான் எரிச்சலுணர்வு. இந்த உணர்வால் அன்றாட செயல்பாடுகளைக் கூட மகிழ்ச்சியாக செய்ய முடியாமல் போகும். இப்படி அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகும் போது, ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிட்டு, அதன் விளைவாக பாலியல் உறவில் நாட்டம் குறையும். இதனால், உடலில் போதுமான கால்சியம் இல்லாதது பாலியல் ஆசை குறைய வழிவகுக்கிறது.

வலி மற்றும் தலைவலி

கால்சியம் குறைபாட்டினால் கால் எலும்புகளில் மட்டுமின்றி தலையிலும் வலியை சந்திக்க நேரிடும். உடலுறவில் ஈடுபடும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அந்நேரம் வலியை உணர்ந்தால், நிச்சயம் உடலுறவில் உள்ள நாட்டம் குறைந்துவிடும். எனவே உடலில் கடுமையான வலியை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறுங்கள்.

களைப்பு

உடலில் போதுமான கால்சியம் இல்லாதது சோர்வு மற்றும் தூக்கமின்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே செக்ஸ் நாட்டத்தைக் குறைக்கிறது. அதிலும் தூக்கமின்மை பிரச்சனை உடலின் ஆற்றல் மட்டத்தை சேமிக்கிறது. இது பாலினத்திற்கான ஏக்கத்தைக் கொண்டிருக்க ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரை தேவைப்படுகிறது.

பாலியல் ஆசை குறைவதற்கான காரணங்கள்

ஒருவரது பாலியல் ஆசை குறைவது என்பது மன அழுத்தத்தினால் வரலாம், நேசிப்பவரின் இழப்பினால் வரலாம், வாழ்க்கைத் துணையுடன் அதிருப்தி அல்லது மன இறுக்கம் போன்றவற்றாலும் ஏற்படலாம். மேலும் காயம், வயதாவது, மதுப் பழக்கம் மற்றும் அழற்சி அல்லது வீக்கத்தினாலும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் பாலியல் ஆசை குறையும்.

எனவே அன்றாடம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்குமாறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். இதனால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். இப்போது கால்சியம் குறைபாட்டின் இதர அறிகுறிகளைக் காண்போம்.

உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?
தசைப் பிடிப்புகள்

கால்சியம் குறைபாட்டின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று கால் தசைப் பிடிப்புக்களாகும். பெரும்பாலும் தொடை, கணுக்கால், கைகளை அசைக்கும் போது பிடிப்புக்கள் ஏற்படும்.

பல் சொத்தை

பற்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்து தான் கால்சியம். உங்கள் பற்களில் சொத்தை ஏற்பட ஆரம்பித்தால், உடலில் கால்சியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். குறிப்பாக கால்சியம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பல் உருவாக்கம் தாமதமாக இருக்கும்.

மோசமான எலும்பு அடர்த்தி

கால்சியம் குறைபாடு எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து எலும்புகளை பலவீனமாக்கும். மேலும் மோசமான எலும்புகளின் அடர்த்தியால் எளிதில் எலும்பு முறிவு, தசை வலி மற்றும் சுளுக்கு போன்றவை ஏற்படும்.

பலவீனமான நகங்கள்

உடலில் கால்சியம் குறைவாக இருந்தால் நகங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் நகங்களின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் போதுமான கால்சியம் சத்து மிகவும் அவசியம். உங்கள் நகங்கள் பலவீனமாக எளிதில் உடையக்கூடியதாக இருந்தால், உங்கள் உடலில் கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button