ஃபேஷன் அலங்காரம்

சூப்பர் டிப்ஸ் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்

ஜீன்ஸ் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் கூறலாம் எந்த வயதினரும் அணியலாம் . அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை,

கிழிந்து போகாது, அப்படியே கிழிந்து போனாலும் ஃபேஷன் என்று கூறிக்கொள்ளலாம், இது போல பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

சந்தையில் தற்போது பல வகையான டிசைன்களில் ஜீன்ஸ் வகைகளை காணலாம்.

அந்த வகையில் ஸ்டைலான இளசுகள் எல்லாலோரும் ப்ரேட் டெனிம் ஜீன்ஸ் (Frayed Denim) விரும்பி அணிகிறார்கள். இது நாம் அணியும் ஜீன்ஸ்களில் சற்று வேறுப்பட்டு காணப்படுகிறது. ஆம் நாம் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை காசு கொடுத்து வாங்காமல் எவ்வாறு உருவாக்குவது என பார்ப்போம்.

இதற்கு முதலில் பழைய ஜீன்ஸ் ஒன்று, கத்தரிக்கோல், டுவிசர்,மணல் கடதாசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை தயாரிப்பதற்கு ஒரு மணித்தியாலங்கள் மட்டுமே செலவாகும்

முதலில் டெனிமை எடுத்து கணுக்கால் பகுதியில் படத்தில் காட்டியவாறு வெட்டிக் கொள்ளவும்.


வெட்டிய பகுதியில் இருந்து 2 இன்ஞ் வைத்து கோடு ஒன்றை வரைந்து கொள்ளவும்.

வெட்டிய பகுதியில் இருக்கும் வெள்ளை நூலை படத்தில் காட்டியுள்ளவாறு டுவிசரை கொண்டு கழற்றி எடுக்கவும்.


படத்தில் காட்டியவாறு டெனிமில் உள்ள வெள்ளை நூல்களை அகற்றி கத்தரியால் வெட்டிக் கொள்ளவும்.

படத்தில் காட்டியவாறு டெனிமில் இருக்கும் நூல்களை மணல் கடதாசி கொண்டு சரி செய்யவும்.

Related posts

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் எது தெரியுமா?

nathan