மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இந்த பகுதிகளில் உண்டாகும் அரிப்பு ஆபத்தா?

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண் மிகவும் மகிழ்ச்சியாக தனது குழந்தையின் வரவை எதிர்நோக்கி இருக்க வேண்டிய காலம் ஆகும். ஆனால் இந்த கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன. கர்ப்ப காலத்தில் உண்டாகும் சில பிரச்சனைகளால் கர்ப்பிணி பெண்கள் தடுமாற்றம் கொள்கிறார்கள்.. என்ன செய்வது, இதற்கான தீர்வு என்ன என்பது எல்லாம் தெரியாமல் தவிக்கிறார்கள்..

இப்படி கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஒரு பிரச்சனை தான் கர்ப்ப காலத்தில் அரிப்பு உண்டாவது, உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்.. சொறிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுவதோடு, இது ஒரு அசௌகரியத்தையும் உங்களுக்கு கொடுக்கும். இது போன்ற கர்ப்ப கால அரிப்பு பிரச்சனைக்கு சிறந்த தீர்வுகள் என்ன என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பொதுவான பிரச்சனை

அனைத்து கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இந்த அரிப்பு உண்டாவது.. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்று கைகள் துடித்தாலும் கூட, அரிப்பு உண்டாகும் போது சொறியக்கூடாது. இவ்வாறு சொறிந்தால் அரிப்பு அதிகரிக்க தான் செய்யும்.. எனவே மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்.

பயம் வேண்டாம்

கர்ப்ப காலத்தில் வயிற்றில் சதைகள் விரிவடைவதாலும், சதை மடிப்புகள் உள்ள இடங்களிலும் இது போன்ற அரிப்புகள் உண்டாவது இயல்பான ஒன்று தான் எனவே இது குறித்து பயம் கொள்ள தேவையில்லை.. கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிப்பதாலும் இந்த பிரச்சனை உண்டாகிறது.

ஈரப்பதமாக இருக்க கூடாது

அரிப்பு உண்டாகும் பகுதிகளை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சதை மடிப்புகள் வயிற்றுப் பகுதிகள் போன்ற இடங்களில் வியர்வை அல்லது குளித்து முடித்த பின் ஈரமாக இருப்பது போன்றவை இருக்க கூடாது. இவை அரிப்பை உண்டாக்கும் என்பதால் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அந்த இடங்களில் கொப்புளங்கள் வருவதை தடுக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உடை

கர்ப்ப காலத்தில் உடை விஷயத்தில் கவனம் அவசியம். எக்காரணத்தை கொண்டும், முள் போன்று குத்தும் ஜமிக்கி வைத்த உடைகள், நைலான் உடைகள் போன்றவற்றை அணிய கூடாது. காட்டன் உடைகளையே அணிய வேண்டும். உடைகள் தளர்வானதாக இருக்க வேண்டியது அவசியம்.

வயிற்றில் கோடுகள்

கர்ப்ப காலத்தில் வயிற்றில் கோடுகள் தோன்றுவது இயல்பான ஒன்று தான்.. ஆனால் சில பெண்களுக்கு இந்த கோடுகள் பிரசவம் ஆன உடன் அப்படியே மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு இந்த கோடுகள் வயிற்றில் அப்படியே நிலையாக தங்கிவிடும். இந்த வயிற்றில் விழுகும் கோடுகள் அல்லது வரிகளை மறைக்க, மார்க்கெட்டில் சில லோஷன்கள் மற்றும் க்ரீம்கள் விற்கப்படுகின்றன. இந்த க்ரீம்களை மருத்துவரின் பரிந்துரையின் படி வாங்கி பயன்படுத்துங்கள். இதனால் அந்த வரிகள் தங்காது..!

குளியல்

குளிக்கும் போது சற்று வெதுவெதுப்பான நீரில் குளித்தால், இந்த அரிப்பிற்கு சற்று நிவாரணமாக இருக்கும். அரிப்பில் இருந்து விடுதலை கிடைத்தது போன்ற உணர்வு உண்டாகும். எனவே வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

மஞ்சள் பொடி

குளிக்கும் பொழுது அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியுடன் சிறிது நல்லெண்ணை சேர்த்துக் குழைத்து குளிக்கச் சென்ற உடன் முதலில் வயிற்றில் தடவிக் கொள்ளவும். குளித்து முடிக்கும் போது சோப் அல்லது பாசிப் பயறு மாவு தேய்த்துக் கொள்ளலாம். கர்ப்பமான 5, 6 மாதங்களிலிருந்து தினமும் இப்படி மஞ்சள் நல்லெண்ணை குழைத்துத் தடவி வந்தால் அரிப்பு மட்டுமல்ல குழந்தை பிறந்த பின் வயிற்றில் ஏற்படும் கோடுகள் கூட வராது.

தேங்காய் எண்ணெய்

வயிற்றில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து, பாசிப்பயறு மாவு பூசி குளிப்பதாலும் இந்த அரிப்பில் இருந்து விடுதலை பெற முடியும்.

ஈரப்பதம்

சருமத்தில் ஈரப்பதம் நீடிக்க வேண்டும் என்றால், நீங்கள் நீர்ம ஆதாரங்களை அதிகமாக உட்க்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஜூஸ் வகைகள், தண்ணீர் போன்றவற்றை உட்க்கொள்வதன் மூலமாக உங்களது சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். இதனால் சருமத்தில் உண்டாகும் அரிப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளது.

அலச்சியம் வேண்டாம்

வயிறு விரிய விரிய, கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் அரிப்பு ஏற்படுவதும் இயல்பான ஒன்று. ஆனால், உடல் முழுக்க வித்தியாசமான அரிப்பு இருந்தால், அது குழந்தையின் கல்லீரல் செயல்பாடு குறைவதற்கான அறிகுறியாக இருக்கலாம். சாதாரண அரிப்புதானே என அலட்சியப்படுத்தினால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button