மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? மாதவிடாய் காலத்தில் பெண்கள் தலைக்கு குளிக்க கூடாதா?

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

இன்றைய பெண்களுக்கு மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஓய்வாக இருந்தனர். அந்தக் காலத்தில் இந்நிகழ்வு ஒரு விதமான மரபு பின்பற்றப்பட்டது.

நாம் முன்னோர்கள் மாதவிலக்கு நாட்களில் தலைக்கு குளிப்பது சரியில்லை என்று அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.

உண்மையில் உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும் போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம். இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.

இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமாக சொல்ல முடியாது. பெண்கள் தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

201802101109174354 push off menstruation in a natural way SECVPF.gif

இந்த நாட்களில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

இந்த நாட்களில் உடலானது வழக்கத்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலருக்குச் சளி பிடிக்கலாம். முடிந்தவரை இதை தவிர்ப்பதே நல்லது.

நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக்கொள்ளுதல் வேண்டும்.

சுத்தம், சுகாதாரமான உணவு, நிறை தண்ணீர், இரும்புச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாயின் போது குறைந்தபட்சம் இந்த நாட்களிலாவது பால் அவசியம் பருக வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button