ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதிக்கலாமா? |

[ad_1]

திருமணமான ஆண் பெண் அனைவருக்கும் தனக்கென ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என எண்ணுவது இயற்கையே, ஆனால் இதில் ஏதேனும் தாமதமோ, குறைவோ இருப்பின் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் பெரிதும் பாதித்துவிடும். குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது இன்றைய பெண்களிடையே குறிப்பாக நகரத்து பெண்களிடையே அதிகமாகியுள்ளது. 

பெண்களுக்கு வயதாகும் போது கரு முட்டையின் தரமும் குறைகிறது என்பதை பலரும் உணரவில்லை. இதனால் கருத்தரிக்க முடியாமை, பிரசவக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. குழந்தை பெற்றுக் கொள்ள உகந்த வயது 20 முதல் 35 வயது வரையாகும். 35 வயதிற்கு மேல் இயற்கையாய் கர்ப்பம் தரிப்பது குறைந்து விடுவதுடன் குறைப்பிரசவம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

மேலும் கருமுட்டையின் தரமும் 35 வயதிற்கு மேல் குறைந்து விடுவதால் க்ரோமோசோம் குறைபாடு ஏற்படவும், சிசுவின் உடல் உறுப்புகளின் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. இதைத்தவிர 

* பேறுகால நீரிழிவு உண்டாகலாம். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகமாகி (பிக்பேபி) பிரசவம் சிக்கலாகலாம். 

* தொப்புள் கொடி கருப்பையின் வாய் அருகே உண்டாவதும் இதனால் சிசேரியன் செய்ய வேண்டியதும் ஏற்படலாம். பேறுகாலத்தினால் ஏற்படக்கூடிய உயர் இரத்த அழுத்தமும் இவர்களுக்கு ஏற்படலாம். 

* சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் 35-39 வயதில் 41 சதவீகிதம் என்று 40 வயதிற்கு மேல் 47 சதவீதம் என்றும் கூறப்படுகிறது. 

* இரட்டை குழந்தைகளோ, மூன்று குழந்தைகளோ உருவாகும் வாய்ப்பும் தாதமான கர்ப்பத்தில் ஏற்படலாம். இன்றைய மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்ப சாதனைகளும் பல பேறுகால மற்றும் கருத்தரிப்பு பிரச்சினைகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் தீர்வுகளை அளித்து வருகிறது என்பதை மறுப்பதில்லை. 

இருந்தாலும் வந்த பின் சமாளிப்பதை விட வரும்முன் தவிர்ப்பது புத்திசாலித்தனம் என்பதால் சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புத்திசாலித்தனமான முடிவை இன்றைய பெண்கள் எடுக்க வேண்டும். குழந்தை பிறப்பு என்பது ஆணின் விந்தனுவும் பெண்ணின் கரு முட்டையும் இணைவதால் ஏற்படுகிறது. 

இதில் இயற்கையாக தடையின்றி நடைபெற ஆண் பெண்ணின் விந்து தன்மையை பொறுத்தே இருக்கிறது. இதில் ஆணின் விந்தனுவின் தன்மை தரத்திலும், அளவிலும் செயல்பாட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும். விந்தணுவின் எண்ணிக்கை 15 மில்லியனுக்கு மேல் இருப்பது சரியான அளவாகும். 

சுத்தமாகவே விந்தணுவே இல்லையென்றால் அந்த நிலையை அஜீஸ் பேர்மியா என்று கூறுவோம். பொதுவாக அஜீஸ்பேர்மியா என்ற நிலைக்கு 30 சதவீதம் மரபுவழி காரணமாக இருக்கும். இதைத்தவிர சில நோய்களும் வாழ்வியல் முறையும் காரணமாக இருக்கலாம்.

 

Related posts

உங்களின் பிறந்த ராசிப்படி எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் எப்படி உருவாகும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க குழந்தைகிட்ட செல்போன் கொடுக்கும் போது இத மட்டும் செய்ங்க!

nathan

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்

nathan

சூப்பர் டிப்ஸ்! இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட நித்தியகல்யாணி!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஊதுபத்தியில் இவ்வளவு தீங்குகளா..?படிக்கத் தவறாதீர்கள்…

nathan

உஷாரா இருங்க…! இந்த மாதிரி கனவுகள் வந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து வரப்போகுதாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

nathan

குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன

nathan