மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உங்க குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

ஆரோக்கியமான உடல் மற்றும் மனதைப் பராமரிப்பதற்கு குடல் ஆரோக்கியம் முக்கியமானது என்பது தெரியுமா? ஒருவரது செரிமான மண்டலம் முறையாக செயல்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இரைப்பைக் குடல் பாதையானது பல்வேறு முக்கிய செயல்பாட்டைச் செய்யும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்டது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், நல்ல மனநிலையை உணர வைக்கும் செரடோனின் என்னும் கெமிக்கலை உற்பத்தி செய்யவும், உணவை ஆற்றலாக மாற்றவும், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் என பல முக்கிய பணிகளைச் செய்கிறது.

Signs You Have an Unhealthy Gut
ஆனால் இரைப்பைக் குடல் பாதையில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களால் அதிகரிக்கும் போது தான் நிலைமை மோசமாகின்றன. ஒருவரது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறையும் போது, உடலினுள் உள்ள பல்வேறு உறுப்புக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். சொல்லப்போனால், மோசமான குடல் ஆரோக்கியம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஆட்டோ-இம்யூன் நோய்கள், சர்க்கரை நோய், நாள்பட்ட சோர்வு, பதற்றம், மன இறுக்கம், எக்ஸிமா, சரும அரிப்பு மற்றும் இதர நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

பெரும்பாலானோருக்கு குடலில் உள்ள பாக்டீரியாக்களின் பிரச்சனையினால் தான், இவ்வளவு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது என்பது தெரிவதில்லை. ஒருவரது குடல் மோசமான ஆரோக்கியத்துடன் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இக்கட்டுரையில் குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் வெளிக்காட்டும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

செரிமான பிரச்சனைகள்

வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப் போக்கு அல்லது முறையற்ற குடலியக்கம் போன்றவை மோசமான குடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறிகளுள் முதன்மையானதாகும். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருக்கும் போது, உணவுகள் சரியாக செரிக்கப்படாமல், உடலினுள் அதிகளவு வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு அடிக்கடி வாய்வு வெளியேற்ற வேண்டியிருக்கும். அதோடு அடிக்கடி ஏப்பமும் வரும். சில சமயங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வதாலும் இந்நிலை வரலாம். எனவே உடனே குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகள்

செரிமான மண்டலத்தின் முக்கிய பணியே உண்ணும் உணவுகளை உடைத்து, அதில் உள்ள சத்துக்கள் உடல் செல்களுக்கு வழங்குவது. இந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டு தான் செல்கள் வளர்ச்சி அடைவதோடு, தன்னைத் தானே சரிசெய்தும் கொள்கிறது. எப்போது செரிமான மண்டலமானது மோசமாக செயல்படுகிறதோ, அப்போது உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியாமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அவஸ்தைப்படக்கூடும். பெரும்பாலும் குடல் மோசமாக இருந்தால், வைட்டமின் டி, கே, பி12 மற்றும் பி7, மக்னீசியம் போன்ற சத்துக்களில் குறைபாடு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஆற்றலின்மை

நன்கு தூங்கி காலையில் எழுந்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்ட பின்பும், மிகுதியான களைப்பை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடல் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். வளர்சிதை மாற்றம் என்பது ஒரு சிக்கலான செயல்முறை. இது குடலானது உணவுகளை உடைத்து ஆற்றலை வழங்கும் போது நடைபெறும் செயல்முறையாகும். குடலில் போதுமான நல்ல பாக்டீரியாக்கள் இல்லாத போது, உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல், நாள் முழுவதும் களைப்புடன் இருக்க நேரிடும். ஆகவே நீங்கள் மிகுதியான களைப்பை உணர்ந்தால், உடனே உங்கள் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

ஆட்டோஇம்யூன் நோய்கள்

குடல் ஆரோக்கியம் ஆட்டோஇம்யூன் நோய்களான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், கிரோன் நோய்கள் மற்றும் லுபஸ் போன்றவற்றுடன் தொடர்புடையது. ஒருவரது குடலில் நல்ல பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, அவர் ஆட்டோஇம்யூன் நோய்களின் தாக்கத்தால் அவஸ்தைப்படக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகளான முகப்பரு, ரோசாசியா, எக்ஸிமா அல்லது சீரற்ற தோல் போன்றவையும் ஆரோக்கியமற்ற குடலுடன் தொடர்பு கொண்டதாகும். ஒருவருக்கு குடலில் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது குடல் ஆரோக்கியமானது மோசமான நிலையில் இருந்தாலோ, அவர்கள் சரும பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு மோசமான குடல் ஆரோக்கியம் தான் காரணம். ஆகவே அடிக்கடி உங்களுக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டால், உங்கள் குடலில் தான் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

சர்க்கரை நோய்

பெருங்குடல் நுண்ணுயிர் தொற்று மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்க்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. டைப்-2 சர்க்கரை நோய் கொண்டவர்களது குடல் பாக்டீரியாக்களை பார்க்கும் போது, அவர்களது குடலில் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்காத விரோதமான பாக்டீரியாக்கள் அதிகளவு இருப்பது தெரிய வந்தது. ஆகவே ஒருவருக்கு திடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அவர்களது குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். எனவே உஷாராகிக் கொள்ளுங்கள்.

உடல் பருமன்

உங்களது உடல் எடையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? என்ன செய்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? அப்படியானால் அதற்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம். ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டோரை விட, உடல் பருமனுடன் இருப்போரின் குடலில் பாக்டீரியாக்களின் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருப்பது தெரிய வந்தது. இப்படி குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் உண்ணும் உணவுகளை சரியாக உடைத்தெறிய முடியாமல், உணவுகள் செரிமானமாகாமல், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்பட்டு, எடை குறையாமல் மாறாக உடல் பருமன் அதிகரிக்கும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் ஆரோக்கியமற்ற குடலைத் தான் குறிக்கிறது. ஒருவரது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, கெட்ட பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். இப்படிப்பட்ட வாய் துர்நாற்றத்தை மௌத் வாழ் பயன்படுத்தினாலும் சரிசெய்ய முடியாது. எனவே உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தினால், அதற்கு காரணம் உங்களது மோசமான குடல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஏற்றஇறக்க மனநிலை

உங்களுக்கு திடீரென்று எரிச்சல், சந்தோஷம், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் என்று மனநிலை மாறிக் கொண்டே இருந்தால், அதற்கு மோசமான குடலும் ஓர் காரணம். குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் டாக்ஸின்களை உற்பத்தி செய்து, இரத்தத்தின் வழியே மூளைக்கு அனுப்பி, மனநிலையில் ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகிறது. நமது உடலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவு செரடோனின் குடலால் தான் உற்பத்தியாகிறது என்பது தெரியுமா? எனவே உங்கள் மனநிலை சரியில்லாவிட்டால், அதற்கு உங்களது மோசமான குடல் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தூங்குவதில் பிரச்சனை

படுத்தால் தூக்கம் வருவதில்லையா? அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம். குடல் மோசமான நிலையில் இருந்தால், செரடோனின் அளவு அதிகரித்து, அதனால் தூக்கமின்மை அல்லது தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஆகவே நீங்கள் தினமும் தூங்குவதற்கு சிரமப்பட்டால், அதற்கு மோசமான குடல் ஆரோக்கியமும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆகவே உங்கள் குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button