சூப்பர் டிப்ஸ்! ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நாட்டு மருந்து

நீர்வளம் நிறைந்த இடத்திலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ தாவரச் செடி வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தவை. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்ற. விதையை தூளாக்கி தண்ணீரில் கலந்தால் பசை போல் ஆகிவிடும்.

இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீர்முள்ளி விதையில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. சிறந்த மருத்துவச் செடியாகும். நீர் முள்ளி குறுகலான ஈட்டி வடிவ இலைகளை கொண்டது. நீல கருஞ்சிவப்பு நிற மலர்களையும், கணுக்கள் தோறும் நீண்ட கூர்மையான முட்கள் அணில் பல் போல் வெள்ளையாக இருக்கும்.

60 சி.எம். உயரம் வரை இந்த செடி வளரக்கூடியது. தண்டு சதுரமாக சிறு முடியுடன் இருக்கும். பூ ஒரு செ.மீ. நீளத்தில் இருக்கும். விதைகள் கரும் மரக்கலரில் இருக்கும். ஒரு காயில் 8 விதைகள் இருக்கும். பூ செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்கும். விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவக் குணங்கள்

625.0.560.320.160.700.
இரத்தசோகை ஏற்பட்டு உடலில் அதிக சோர்வு ஏற்படும். அதிகம் மேல் மூச்சு வாங்கி இளைப்பு ஏற்படும். நீர்முள்ளி குடிநீர் தயாரித்து 100 மி.லி. வீதம் தினம் காலை, மாலை இருவேளை குடித்து வந்தால் இந்த பிரச்சினைகளிலிருந்து குணமாகலாம். வீக்கம் குறைந்து உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

மூட்டுவலிக்கு நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது. இது, உடல் உள் உறுப்பு வீக்கங்களையும் போக்கும்.

நீடித்த வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்கள், அரை தேக்கரண்டி நீர்முள்ளி விதை பொடியை 200 மில்லி லிட்டர் மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் பருகினால் நோய் குணமாகும்.

நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்து உடலுக்கு சக்தி அளிக்கும்.

தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளில் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. விதை மட்டுமின்றி அதன் வேரும், இலையும்கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் குடிநீர் சூரணத்தில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button