பெண்கள் மருத்துவம்

மாதவிடாய் உதிரம் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்

மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. இது ஒருவருக்கொருவர் மாறுபடும். சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் சில பெண்களுக்கு உதிரத்தின் நிறம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம். இவ்வாறு கலர் மாறுபட்டு இருந்தால் பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

அடர் பழுப்பு இரத்த நிறம், பழைய இரத்தத்தை குறிக்கிறது. நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த இரத்தம், நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது. இந்த வகை உதிரப்போக்கு பொதுவாக அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.

சிவப்பு நிறம் புதிய இரத்தத்தைக் குறிக்கின்றது. மேலும், இந்த நிற உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறுகின்றது. இந்த வகை இரத்தம் உதிரப் போக்கு அதிகம் உள்ள நாட்களில் காணப்படும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகின்றது.

இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறம் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும். இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாள் காணப்படுகிறது. காலப்போக்கில், இந்த குருதிநெல்லி நிற உதிரம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி விடும். இது மிகவும் சாதாரண விஷயமாகும்.

கருப்பு அல்லது பழுப்பு நிற வண்ணம் மிகவும் ஆபத்தானது. உங்களுடைய மாதவிடாய் கால உதிரத்தின் நிறம் இவ்வாறு இருந்தால் தயவு செய்து அலட்சியம் செய்துவிடாதீர்கள். பழுப்பு அல்லது கருப்பு நிற இரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது. எனினும், மாதவிடாய் தொடங்கி 4 வது நாளில் கருப்பு நிற உதிரத்துடன் சில சிவப்பு நிற திட்டுக்களை நீங்கள் காண நேரிட்டால் கவலை வேண்டாம். ஏனெனில் அது உறைந்த உதிரத்தைக் குறிக்கின்றது. ஆகவே இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
201604011156028504 important symptoms of menopause blood SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button