சரும பராமரிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஷேவ்விங் செய்த பிறகு சருமத்தில் உள்நோக்கி வளரும் முடிகளை தடுப்பது எப்படி?

இந்த பாதிப்பு உங்களுக்கு மட்டும் அல்ல. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பாதிப்பை அனுதினம் அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாக நீங்கள் ஷேவ் செய்வதை தடுக்க முடியாது என்பதால் சில நுணுக்கங்கள் மற்றும் குறிப்புகள் பயன்படுத்தி இந்த நிலையை தடுக்க முடியும். ஆகவே ஷேவ் செய்பவர்கள் இந்த குறிப்புகளை நீங்கள் உண்மையாகவே பின்பற்றினால் உள்நோக்கி வளரும் முடிகள் நிச்சயம் தடுக்கப்படும். மறுமுறை இந்த முடிகள் வளரவே வளராது என்று நம்புங்கள்.

முழுவதும் ஷேவ் செய்வதற்கு மாற்றாக ட்ரிம் செய்யுங்கள்

ஷேவிங் என்பது வேர்கால்களிலிருந்து முடியை அகற்றுவதாகும். இவ்வித முடிகள் சரியான முறையில் வெட்டப்படாத போது உள்நோக்கிய முடி வளர்ச்சி உண்டாகிறது. ட்ரிம்மர் பயன்படுத்தி தாடி மற்றும் மீசையை ட்ரிம் செய்வதால் நன்மை கிடைக்கும். காரணம் இவை சருமத்தில் இருந்து முடிகளை முழுவதும் இழுப்பதில்லை. மேலும் ரேசர் வெட்டுகளும் குறைக்கப்படுகிறது.

ஈரமான முகத்தில் ஷேவ் செய்வது சிறந்தது
ஈரமான முகத்தில் ஷேவ் செய்வது சிறந்தது
ஷேவ்விங் செய்யும் போது உராய்வு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரப்பதம் இல்லாமல் வறண்ட முறை ஷேவ் இந்நாட்களில் ஆண்களால் பரவலாக பின்பற்றப்படுகிறது. இது சரும எரிச்சலை உண்டாக்கும். மேலும் சருமம் வறண்டு, ரேசர் வெட்டு, சரும தடிப்பு மற்றும் கட்டிகள் தோன்றுவதற்கு இது காரணமாக உள்ளது. இது தவிர, வறண்ட முறையில் ஷேவ் செய்வதால் உள்நோக்கி வளரும் முடிகள் அங்கேயே தங்கி விடுகிறது. இதனால் சருமம் மிகவும் சென்சிடிவ் நிலையை அடைகிறது.

ஷேவிங் ஜெல் பயன்படுத்தி ஷேவ் செய்வதால் வழவழப்பான முறையில் ஷேவ் செய்ய முடிகிறது. இது ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகிறது . ரேசர் ப்ளேடு சருமத்தில் மிருதுவாக பரவுவதால் சுத்தமான மற்றும் நேர்த்தியான முறையில் ஷேவிங் செய்யப்படுகிறது. ஷேவிங் ஜெல்லில் குளிர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் இருப்பதால் சரும எரிச்சல் தடுக்கப்படுகிறது.

ஷேவ் செய்வதற்கு முன் சருமத்தை சுத்தப்படுத்துங்கள் மற்றும் மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள்

சில நேரங்களில் அவசரமாக ஷேவ் செய்ய நேரலாம். ஆனால் ஒருபோதும் நேரடியாக ஷேவ் செய்யத் தொடங்க வேண்டாம். முதலில் உங்கள் முகத்தை ஒரு மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள் மற்றும் சருமத்தை மிருதுவாக மாற்ற நீர்ச்சத்து அதிகரிக்கும் சரும க்ரீமை பயன்படுத்துங்கள். இந்த முறைகளை பின்பற்றுவதால் ஷேவிங் செய்யும் உகந்த நிலையை உங்கள் சருமம் அடைகிறது. இதனால் வெட்டுகள் ஏதுமின்றி மென்மையான முறையில் ஷேவிங் செய்ய முடிகிறது.

ஒரே முறை பயன்படுத்தும் ரேசர் ப்ளேடுகளைப் பயன்படுத்துங்கள்
ஒரே முறை பயன்படுத்தும் ரேசர் ப்ளேடுகளைப் பயன்படுத்துங்கள்
சரும பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு முறை ஷேவ் செய்யும் போது புதிய ப்ளேடுகளைப் பயன்படுத்துங்கள். தினமும் ப்ளேடை மாற்றவில்லை என்றாலும் மூன்று முறை பயன்படுத்திய பின் கட்டாயம் மாற்றுங்கள். இவை சிறந்த தீர்வுகளைத் தரலாம். புதிய பிளேடுகள் சருமத்தில் உண்டாகும் தொற்று பாதுப்புகளைத் தடுக்கும். அதனால் ஷேவ் செய்த பிறகு உண்டாகும் பிரச்சனைகள் தடுக்கப்படும். குறிப்பாக உள்நோக்கி வளரும் முடிகள் வளர்ச்சி தடுக்கப்படும்.ingrown hair remedies

தினமும் புதிய ப்ளேடு மாற்றுவதில் பொருளாதார சிக்கல் இருந்தால் அதுவும் ஒரு பிரச்சனையில்லை. ஸ்ட்ரைட் ரேசர் வாங்கி கொள்ளுங்கள். இது மிகவும் விலை மலிவானது. மற்றும் வழக்கமான ரேசருக்கு ஒரு சிறந்த மாற்றாகவும் உள்ளது. ஸ்ட்ரைட் ரேசர் பயன்படுத்தி ஷேவ் செய்வது மிகவும் எளிது மற்றும் இது சிறப்பாகவும் வேலை புரியும். உள்நோக்கி வளரும் முடிகளால் உண்டாகும் அபாயமும் குறையலாம்.

குளித்த பின் ஷேவ் செய்யுங்கள்

ஷேவ் செய்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். குளிக்கவில்லை என்றாலும் குறைந்த பட்சம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை மட்டும் கழுவுங்கள் . இதனால் சருமம் மிருதுவாக மாறுகிறது மற்றும் ஷேவிங் செய்ய உகந்த நிலை சருமத்திற்கு உண்டாகிறது. வெதுவெதுப்பான நீர் தொற்று எதிர்ப்பியாக செயல்புரிந்து சரும தொற்று பாதிப்பை உண்டாக்கும் பாக்டீரியாக்களை விரட்டுகிறது. வெதுவெதுப்பான நீர் முடியை மென்மையாக்கி உள்நோக்கி வளரும் அபாயத்தை குறைக்கிறது என்பது மிக முக்கிய செய்தியாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button