அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் தழும்புகளா?

முகப்பருக்கள் இல்லை என்றாலும் அழகுக்கு இடையூறாக இருப்பது கரும்புள்ளிகளும், தழும்புகளும் தான்.

இந்த தழும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே மிக எளிதாக சரி பண்ணலாம்.

ஆலிவ் எண்ணெய்

தழும்புகள் உள்ள இடத்தில் ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள், பின்னர் மிதமான நீராவியில் முகத்தை காட்ட வேண்டும்.

இதன் மூலம் துளைகள் சுத்தமாகி தழும்புகளின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைந்து விடும்.

face beauty 002

சந்தனம்

சந்தனப் பொடியை, ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவவும்.

பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசி கழுவி விடவும்.

face beauty 003

உருளைக்கிழங்கு

கந்தகமும், பொட்டாசியமும் கலந்துள்ள உருளைக்கிழங்கு தழும்புகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உருளைக்கிழங்கை பச்சையாக எடுத்து அரைத்து, அந்த சாற்றைப் பிழிந்து தழும்பு உள்ள இடத்தில் தடவிவர சரியாகும்.

face beauty 004

பாதாம்

பால் அல்லது தண்ணீரில் பாதாமை 12 மணிநேரம் ஊற வைக்கவும்.

பாதாம் கொட்டையின் தோலை உரித்து விட்டு, நன்றாக அரைத்து, சிறிது ரோஸ் வாட்டர் கலந்து தழும்புகளில் தடவிக் கொள்ளவும்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button