சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாமாம். ஜவ்வரிசி சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஜவ்வரிசியை கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அவ்வப்போது இதை கிளறி விட்டால் தான் முழுமையாக ஊறும்.

* புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அரிசி நன்கு அரைப்பட்டவுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து அரைக்கவும்.

* உப்பு சேர்த்து மாவை 2 மணி நேரம் புளிக்க விடவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

* புதினா சட்னியுடன் சாப்பிட்டால் டேஸ்ட் கூடுதலாக இருக்கும்.201607270816500922 how to make delicious nutritious sago dosa SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button