மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 12 விஷயங்கள்!!!

கர்ப்ப காலத்தின் போது, கர்ப்பிணி பெண்ணின் உடம்பு முழுவதும் தொந்தரவு கொடுக்கும் ஹார்மோன்கள் பாய்ந்தோடும். இந்நேரத்தில் தான் ஒரு பெண்ணின் உண்மையான நிறம் தெரிய நேரிடும். கர்ப்ப காலத்தின் போது, ஹார்மோனால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களை கையாளும் ஆண்களுக்கு பதக்கம் தான் அளிக்க வேண்டும். இருப்பினும், இவ்வகை ஆண்கள் தான், குழந்தையை சுமக்கும் தங்கள் அழகிய மனைவியிடம் இனிமையான விஷயங்களை கூறுவார்கள்.

கர்ப்பிணி பெண்ணை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு அன்பை வாரி வழங்க வேண்டும். முக்கியமாக அவளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். இதனை செய்ய ஒரு கணவன் தவறினால், அவனுக்கு தான் பிரச்சனை. கர்ப்பம் என்றால் ஆண்களுக்கும் சில கஷ்டங்கள் தான். என்றாலும் கூட, இவ்வகையான நேரத்தில் மனைவியிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளது. கர்ப்பிணியான உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத அந்த 12 விஷயங்களைக் பற்றி இப்போது பார்க்கலாமா…?

மீண்டும் சாப்பிடுகிறாயா?

கர்ப்ப காலத்தில் எப்போதும் நல்ல உணவு வகைகளை உண்ண வேண்டும். உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கையில், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவருக்கு பல உணவுகளை எடுத்துக் கொடுத்து உண்ண வற்புறுத்துவார்கள். அதனை உண்ண வேண்டுமானால் ஒரு நாள் போதாது.

வீடு குப்பையாக உள்ளது

கர்ப்பிணியான மனைவியிடம் சொல்ல கூடாத விஷயத்தில் இதுவும் ஒன்று. வீடு சுத்தமாக இல்லையென்றால் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்களே சுத்தப்படுத்துங்கள்.

குழந்தைக்கு பெயர்கள்? மீண்டும்!

குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுக்கும் ஆனந்தத்தை பெண்கள் கண்டிப்பாக உணர்வார்கள். இதனை கொடுமையாக எண்ணும் சில ஆண்களும் உண்டு.

வேகமாக நட

கர்ப்பிணி மனைவியின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல், அவளை வேகமாக நடக்க அதட்டுவதும் தவறு. கர்ப்பிணியான மனைவியிடம் சொல்லக்கூடாத மற்றொரு விஷயம் இது.

அழ ஆரம்பித்து விட்டாயா?

கர்ப்பிணியான உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத முக்கியமான விஷயம் இது. ஹார்மோன் சமமின்மையால் தான் அவர்கள் சில நேரம் அழுவார்கள். அதனால் பழகிக் கொள்ளுங்கள்.

குழந்தை பற்றிய புத்தகங்கள் அலுப்பு தட்டுகிறது

குழந்தை வளர்ப்பு பற்றிய சில புத்தகங்களை உங்கள் மனைவி உங்களிடம் கொடுத்தால் அதனை அவளுடன் அமர்ந்து படியுங்கள். குழந்தை பிறந்த பிறகு நல்ல தகப்பனாக மாற இது உதவிடும்.

கர்ப்ப காலம் எனக்கு கஷ்டமாக உள்ளது

கர்ப்பிணி மனைவியிடம் சொல்லக்கூடாத மற்றொரு விஷயம் இது. உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டால், அதனை உங்கள் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதை உங்கள் மனைவியிடம் சொன்னால் அவருக்கு டென்ஷன் தான் அதிகரிக்கும்.

நான் இன்னும் தயாராக இல்லை

ஐயோ, இது ரொம்பவும் முக்கியம். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போன்று இருக்கும். அதனால் கர்ப்பிணியான உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாதா விஷயம் இது.

நான் மருத்துவமனைக்கு வர வேண்டுமா?

மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரத்தில், ஒரு கணவனாக நீங்களும் அங்கே இருப்பது அவசியம். இது உங்கள் மனைவிக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறாய்?

கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவியிடம் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய் என்பதையும் கண்டிப்பாக கேட்காதீர்கள். மாறாக எவ்வளவு அழகாய் இருகிறாய் என புகழ்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

முதுகு தேய்க்க மறந்து விட்டாய்

உங்கள் மனைவி உங்கள் முதுகை தேய்க்க மறந்து விட்டால் என கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவர்களை குறை கூறாதீர்கள். குழந்தை வளர்ச்சியினால் ஏற்படும் வலிகளை சந்திக்கும் உங்கள் மனைவிக்கு நீங்கள் தான் இப்போது மசாஜ் செய்ய வேண்டும்.

நீ எதையும் செய்வதில்லை
நீ எதையும் செய்வதில்லை
உங்களுக்காக உங்கள் மனைவி எதையும் செய்வதில்லை என கண்டிப்பாக பேசாதீர்கள். அவர்களிடம் நல்லபடியாக நடக்க பல வழிகள் உள்ளது. நீங்கள் தான் அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டுமே தவிர அவர்கள் உங்களை இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button