சூப்பர் டிப்ஸ்! சுவாசப் பையை சுத்தப்படுத்தும் கற்பூரம்

நம் வீட்டுகளிலும் சரி, கோவில்களின் சரி கற்பூரத்தில் தான் கடவுளுக்கு தீபாரதனை செய்வார்கள்.

பூஜையின் நிறைவாக கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம். கற்பூரத்தின் நன்மையை அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

வெறும் வழிபாட்டிற்கு மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு கற்பூரம் எவ்வளவு நன்மையை இருக்குன்னு பார்ப்போம்

  • கற்பூரத்தின் வாசனையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நுகர்ந்தால் சுவாசப் பையை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • கற்பூரம் ஆன்மாவிற்கு பிடித்தமான ஒரு பொருள் என்று புராண நூல்கள் கூறுகின்றன.
  • கற்பூரம் ஆன்மாவிற்கு பிடித்த ஒளி, வாசனையை கொண்டிருக்கிறது. கற்பூரத்திற்கு எதிர்மறை எண்ணங்களை நீக்கக்கூடிய தன்மை கொண்டது. இதன் வாசனை மனதை ஒருநிலைப்படும். நல்ல எண்ணங்கள், நல்ல உணர்வுகளை தூண்டும்.
  • கற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் செய்யும் பணியை கற்பூரம் செய்கிறது.edible cam
கற்பூரத்தின் மருத்துவக் குணங்கள்
  • விரும்பத்தக்க நறுமணத்தை தந்து கிருமி நாசினியாக கற்பூரம் பயன்படுகிறது.
  • தோலில் ஏற்படும் பல வியாதிகளை இது குணமாக்குகிறது.
  • அரிப்பு, சொறி, சிரங்கு, வெட்டுக்காயம், தீப்புண் போன்றவற்றை கற்பூரம் குணமாக்குகிறது.
  • தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கொஞ்சம் கலந்து காலில் சேற்றுப்புண் தோன்றும் இடத்தில் தடவி வந்தால் சேற்றுப்புண் உடனே குணமாகும்.
  • சந்தனத்தில் சிறிது கற்பூரத்தை குழைத்து உடலில் பூசினால் வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுவதை கற்பூரம் தடுக்கிறது.
  • கால் வெடிப்புகளை கற்பூரம் குணப்படுத்துகிறது. பாத்திரத்தில் சூடுதண்ணீரை ஊற்றி அதில் சிறிது கற்பூரத்தை போட்டு கலந்து கால்களை முக்கி வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் கால் வெடிப்புகள் நீங்கும்.
  • கற்பூரம் தலைவலியை போக்கும். கற்பூரத்தை சந்தனம் அல்லது துளசி சாற்றில் குழைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கிவிடும்.
  • எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தால் ஒற்றைத்தலைவலி நீங்கும்.
  • மூட்டுவலி, மூட்டு பிடிப்பு ஏற்பட்டால் கற்பூர எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். தசைப்பிடிப்புகளும் சரியாகும்.
  • தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூர எண்ணெய்யை கலந்து தினமும் தலையில் தேய்த்து வரலாம். வேர்களை உறுதி பெற்று தலை நீண்டு வளரும்.
  • துளசி சாறில் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும்.
  • பல் வலியால் அவதிப்படுபவர்கள் கிராம்புடன் கற்பூரத்தை சேர்த்து தூளாக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல் வலி சரியாகும்.
  • கொசுக்கடி, பூச்சிக்கடிக்கு கற்பூர எண்ணெய்யை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
  • உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் கற்பூரத்தை தேய்த்து வந்தால் காயம் விரைவில் குணமாகும்.
  • நகங்களில் ஏற்படும் தொற்று மற்றும் ஓனிக்கோமைகோசிஸ் போன்ற நோய்களுக்கு கற்பூரம் மருந்தாக செயல்படும்.
  • கற்பூர எண்ணெயின் வாசனை மனதில் ஒரு மகிழ்ச்சியான எண்ணத்தை உண்டாக்கக்கூடியது. அதன்மூலம் நிம்மதியான தூக்கத்தை தரும். உங்கள் தலையணையில் சில துளிகள் கற்பூர எண்ணெய் விட்டு படுத்தால் அந்த நறுமணத்தில் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button