தலைமுடி சிகிச்சை

ஆண்களே! என்ன பண்ணாலும் உங்க தலையில இருக்க பொடுகு போகமாட்டீங்குதா?

பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் பொடுகு. இந்த பொடுகை ஆரம்பத்திலேயே கவனித்து போக்க முயற்சிக்காவிட்டால், பின் அதுவே தலைமுடியை அதிகம் உதிரச் செய்து, தலைமுடியை மெலியச் செய்யும்.

பல ஆண்கள் தங்களுக்கு இருக்கும் பொடுகைப் போக்க எத்தனையோ ஷாம்புக்களை மாற்றியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில சிகிச்சைகளைப் பின்பற்றினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இஞ்சி இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி காட்டன் பயன்படுத்தி தடவி, 1 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை என 2 வாரம் தொடர்ந்து பின்பற்றினால், பொடுகு முற்றிலும் போய்விடும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு கற்றாழை ஜெல்லுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு விரைவில் நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி அலசிய பின், ஆப்பிள் சீடர் கலவையால் தலைமுடியை அலசி, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், சீக்கிரம் பொடுகு போய்விடும்.

புதினா மற்றும் வேப்பிலை 20 வேப்பிலையுடன், 10 புதினா இலைகளை எடுத்து, 4 கப் நீரில் போட்டு, பாதியாக நீர் குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி, அந்த இலைகளை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, நீரில் அலச வேண்டும்.

பேக்கிங் சோடா 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 1 முறை மட்டும் தான் செய்ய வேண்டும்.

பூண்டு 5-6 பூண்டு பற்களை எடுத்து அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

புளித்த தயிர் 3-4 ஸ்பூன் புளித்த தயிரை ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, நன்கு 30-60 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பின்பற்றினால், பொடுகு வேகமாய் போய்விடும்.

secrethomeremediestotreatdandruff 13 1484291633

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button