சரும பராமரிப்பு

Perfume பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கங்க…

வாசனைத் திரவியங்கள் என்று சொல்லப்படும் பெர்பியூம் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் மகிழ்ச்சியாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகவும் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும்.

சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக இருக்கும். அதன் வாசத்தின் தூரம் மிகவும் நீண்டதாக இருக்கும். பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை வரும்.

அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது.

 

வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?
கடைக்கு வெளியே வாசனையை பரிசோதிக்க மறக்கவேண்டாம், கடையின் ஏசியில் வாசனையின் விளைவு இருக்காது. எனவே, வெளியில் சோதித்தால் உண்மையான மணத்தை சொல்லிவிடும்.
கோடையில் கலப்படமற்ற வாசனை திரவியத்தை தேர்வு செய்வது அவசியம். அது நீண்ட நேரம் வியர்வையையும் தாண்டி நிற்கும்.
இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதினா அல்லது ‘சிட்ரஸ்’ நறுமணங்களை தேர்வு செய்யலாம். இது புத்துணர்ச்சியூட்டும்.அதிக நறுமண தொனியை விரும்பினால், சாண்ட்லவுட் (சந்தனம்) போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] வெப்பத்தினால் தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு நம்மை மிகவும் எளிதில் ஆளாக்கிவிடும். எனவே பெர்பியூமின் உள்ளடக்கங்களை சருமத்திற்கு தீங்கு இல்லாதவையா என்று சரிபார்ப்பது முக்கியம்.
உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களா என்பதை உறுதிப்படுத்தவும், என்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button