ஆரோக்கிய உணவு

துளசி சாப்பிடுங்க. நீரிழிவு குணமாகும்!!

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

துளசியின் தெய்வீகத்தன்மை

இந்தியாவில் துளசி இலை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்த துளசி இலை சேர்த்த தண்ணீர் கோவில்களில் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. துளசி இலை மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாகும். துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.

ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

தற்போது துளசியில் உள்ள Ocimum sanctum என்ற பொருள் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள். விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டறிந்துள்ளனர்.

நீரிழிவு குணமாகும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள், போன்றவை பாதிக்கப்படுகின்றன. துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைக்கப்பட்டிருந்த்தோடு, முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், ஈரல் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

தினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

24 tulsi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button