சைவம்

சிம்பிள் ஆலு மசாலா

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரை கிலோ,
சின்ன வெங்காயம் – கால் கிலோ,
பூண்டு – 15 பல்,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் – 2 கப்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக்குங்கள்.
* எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள்.
* இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள்.
* பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள்.
* இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள்.
* பெயர்தான் ‘சிம்பிளே’ தவிர, மிகவும் சுவையானது இந்த ஆலு மசாலா!mase

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button