ஆரோக்கிய உணவு

அலட்சியம் வேண்டாம்…. உயிரை பறிக்கும் இன்ஸ்டன்ட் உணவுகள்? சாப்பிட்டதும் விஷமாகும் அதிர்ச்சி!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சமையலையில் நீண்ட நேரம் செலவழித்து உணவை சமைத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலான வீடுகளில் நேரம் இருப்பதில்லை.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள் என தங்களது உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அவற்றை வாங்கி சாப்பிடுவது நமக்கு சுலபமாகவும், சுவையாகவும் வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரச்கூடிக்கூடியதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்ற பதில் தான் மறுக்க முடியாதது.

இதுப்போன்று முன்பே செய்யப்பட்ட உணவு வகைகள் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்பதற்காக, அவற்றில் பதப்படுத்தும் உட்பொருட்கள், சர்க்கரை மற்றும் சோடியம் சேர்க்கப்படும். அவை உடலுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. சில சமயம் உயிரையும் பறித்து விடும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தி விடும்.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள்

பேக் செய்யப்பட்ட ஜூஸ்களை, பிரஷ் ஜூஸ்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், நிச்சயம் பிரஷ் ஜூஸ்கள் தான் ஆரோக்கியமானவை. ஏனென்றால், பிரஷ் ஜூஸ்களில் தான் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கும்.

பேக் செய்யப்பட்ட ஜூஸ்களில் குறைவான நார்ச்சத்து மற்றும் ஃபுருக்டோஸ் அதிகமாக உள்ளன. இது இன்சுலின் சுரப்பை தடுத்திடும். பேக் செய்யப்பட்ட ஜூஸ்கள் அனைத்தும் குறைந்தது 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலாவதி ஆகிவிடும். அதற்காக அவை கடுமையான செயல்முறைகளுக்கும், வெப்பமயமாதலுக்கும் உட்படுத்தப்படும். இதனால் பழச்சாற்றில் இருக்கும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அழிந்துவிடும்.

அது தவிர, அவற்றில் வெறும் செயற்கை சுவையும், சர்க்கரையும் மட்டும் தான் இருக்கும். எனவே, அவை உடலுக்கு கேடு விளைக்கக்கூடியவை.
இன்ஸ்டன்ட் கப் நூடுல்ஸ்

இந்த இன்ஸ்டன்ட் கப் நூடுல்ஸில் பதப்படுத்தும் உட்பொருட்கள் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்துவிடும்.

மேலும் இதில் எம்.எஸ்.ஜி. மற்றும் டி.பி.ஹெச்.க்யூ. கொண்டிருக்கலாம். இதை தொடர்ந்து உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாது இது ஒரு மோசமான உணவுகளுடன் தொடர்புடையது. இது இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி அபாயத்திற்கு வழிவகுக்கக்கூடும்.

எனவே, இன்ஸ்டன்ட் நூடுல்ஸை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்தது. அவை உடல் பருமன் அபாயத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு தொடர்பான பிற நோய்களுக்கும் கூட ஏற்படுத்தக்கூடும்.
இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு பொடி

உருளைக்கிழங்கை சமைப்பதற்கு பல்வேறு தொழில்துறை செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் அவை பாக்கெட்டுகளில் நிரம்பப்படுகின்றன.

நற்பதமான உருளைக்கிழங்குடன் ஒப்பிடும் போது இன்ஸ்டன்ட் பிசைந்த உருளைக்கிழங்கு பொடிகளில் சோடியம் அதிகம் இருப்பதோடு, நார்ச்சத்தை முழுவதுமாக இழந்துவிடுகிறது. இதன் முக்கிய மாறுபாடு என்னவென்றால், வைட்டமின் சி -ஐ இழப்பதே ஆகும்.

அதுமட்டுமல்லாது, அவை சுவையிலும் வேறுபட்டிருக்கும். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது இல்லையென்றாலும், இவற்றை விட நற்பதமான உருளைக்கிழங்கை ஒருவர் விரும்பி சாப்பிடுவதே சிறந்தது.

பொடியாக நறுக்கப்பட்ட பூண்டு

புதிதாக நறுக்கப்பட்ட பூண்டின் சுவைக்கு முன்பு, முன்பே வெட்டப்பட்ட பூண்டின் சுவை வேறுபடும். அல்லிசின் என்பது பூண்டில் காணப்படும் ஒரு கலவை ஆகும். இது பூண்டை நாம் வெட்டும் போது ஒருவித சுவையை தரும். ஆனால் அதை உடனடியாகப் பயன்படுத்தினால் மட்டுமே அந்த சுவை நீடிக்கும்.

நறுக்கிய பூண்டை நீண்ட நேரம் வைத்திருந்தால் அது சுவையை இழக்கக்கூடும். பூண்டை முழுவதுமாக, வெட்டி, தட்டி, துண்டு துண்டாக வெட்டி அல்லது பொடியாக நறுக்கி பயன்படுத்துவதை பொறுத்து அதன் சுவை வித்தியாசமாக இருக்கும்.

எனவே, பொடியாக நறுக்கிய பூண்டை வெளியே வாங்குவதற்கு பதிலாக, வீட்டிலேயே இஞ்சி பூண்டு விழுது அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

வெட்டப்பட்ட காளான்கள்

காளான்கள் அதிகப்படியான நீர் உள்ளடக்கம் கொண்டிருப்பதால் விரைவில் அழிந்துபோகும். மேலும், மிகவும் மென்மையானவையும் கூட. முன்கூட்டியே அவற்றை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாகவும், மெலிதாகவும் மாறும்.

முக்கியமான ஒன்று, காளான்கள் வெட்டப்படுவதற்கு முன்பு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.தவறும் பட்சத்தில், காளான்களுக்குள் அழுக்கு சென்றுவிடக்கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button