ஆரோக்கிய உணவு

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா? தொிந்துகொள்ளுங்கள்…………..

வாழ்க்கை முறையை எளிமைப்படுத்துவதற்கு மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது குளிர்சாதன பெட்டி. வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது திருமணமாகாத ஆணாக இருந்தாலும் சரி – அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி தேவைப்படும். அதற்கு ஒரே காரணம் உணவுகளை சேகரித்து அதனை பின்னர் பயன்படுத்துவதற்கே. ஆனால் எத்தனை நாட்களுக்கு உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்? குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா?

இது நீண்ட காலமாக நடந்து வரும் விவாதமாகும். இதன் விளைவாக அவ்வப்போது யாராவது தங்களின் கருத்தை பதிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் அதற்கு ஆதரவாக பேசி வந்தாலும் சிலர் அதற்கு எதிராக தங்கள் கருத்துக்களை கூறுகின்றனர். அதற்கு முடிவெடுக்கப்பட்ட தீர்மானம் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அது வரை நம்மை காப்பாற்றுபவராக குளிர் சாதன பெட்டி விளங்கும். ஆம், பல கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து இது நம்மை காக்கும். சமைத்த உணவை சேமிக்கலாம், பால் உறையாமல் பாதுகாப்பாக இருக்கும், பழங்களும் காய்கறிகளும் நற்பதத்துடன் இருக்கும் மற்றும் குளிராக இருப்பதால் குளிர்ந்த ஜூஸை பருகலாம். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது ஒரே கருவி தான் – அது தான் குளிர் சாதன பெட்டி.

ஆனால் எத்தனை நாட்களுக்கு உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்? நாங்கள் குளிர்சாதன பெட்டியை பற்றி தான் பேசுகிறோமே தவிர உறை பெட்டியை (ஃப்ரீஸர்) பற்றி இல்லை. ஃப்ரீஸர் என வந்து விட்டால், அதன் குணாதிசயத்திலும் சேமித்து வைக்கும் பண்புகளிலும் பெரியளவில் மாற்றம் இருக்கும். இப்போது நாம் பார்க்கப் போவது மீதமுள்ள உணவுகளை எத்தனை நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம்? அது எவ்வளவு ஆரோக்கியமானது? என்பதைப் பற்றி தான்.

குளிரூட்டப்பட்ட உணவும் ஆரோக்கியமும்

குளிர்சாதன பெட்டி நம் வாழ்க்கையை சுலபமாக்கி விட்டது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ஆனால் முடிந்த வரை நற்பதமான சமைத்த உணவையே பயன்படுத்தவும். உணவில் இருக்கும் பாக்டீரியா அதனை கெட்டு போக செய்ய தொடங்கிவிடும். அதனை குளிரூட்டினால் இந்த செயல்முறை சற்று தள்ளி போகுமே தவிர நின்று விடப்போவதில்லை.

நற்பதமாக உண்ணுங்கள்

இதுவே சிறந்த தேர்வாகும். ஒரு வேளைக்கு சமைத்த உணவை முடிந்த வரை அந்த வேளையிலேயே தீர்த்து விடுங்கள். அது மிச்சமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மீதமான உணவை எத்தனை நாட்களுக்கு வைத்திருக்கலாம் என்ற கேள்விக்கு பதில் 3-4 நாட்களாக இருக்கும்.

உறைய வைத்தல்

ஒரு வேளைக்கு சமைத்த உணவை அப்போதே தீர்த்து விட்டால் மிகவும் நல்லது. அப்படி ஒரு வேளை மிஞ்சி விட்டால், சமைத்த 2 மணிநேரத்தில் அதனை ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். ஏற்கனவே சொன்னதை போல் சமைத்த உணவில் பாக்டீரியா இல்லாமல் இல்லை. ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் உணவை விட வெளியில் இருக்கும் உணவு சீக்கிரத்திலேயே கெட்டுப் போகும்.

சந்தேகத்துடன் இருக்காதீர்கள்

உணவின் மீது பாக்டீரியா செயல்பட தொடங்கியவுடன், உணவின் தோற்றத்திலோ சுவையிலோ எந்த ஒரு மாற்றமும் இருக்காது. மாறாக உணவு நஞ்சாக தொடங்க ஆரம்பித்து விடும். முகர்ந்து பார்த்தால் கூட வித்தியாசம் தெரியாது. இவைகள் எல்லாம் சந்தேகத்தை எழுப்பலாம். இப்படி சந்தேகம் எழும் போது ஆரோக்கியமான தேர்வையே தேர்ந்தெடுங்கள். உணவு ஒரு கேள்விக்குறியாகும் போது மறு சிந்தனையே இல்லாமலும் அதனை தூர எரிந்து விடுங்கள்.

உணவு வகை

ஒவ்வொரு உணவு வகைக்கும் தனக்கே உரிய பாதுகாப்பு பண்புகள் இருக்கும். அனைத்து உணவுகளின் வாழ்க்கையும் ஒரே கால அளவில் ஒரே இடத்தை பொறுத்து அமைவதில்லை. உதாரணத்திற்கு, சமைத்த இறைச்சிகள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும் அதே கால அவகாசத்திற்கு சமைக்கப்படாத இறைச்சிகள் இருப்பதில்லை. சமைத்த இறைச்சிகள் 3-4 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் சமைக்கப்படாத இறைச்சிகள் 1-2 நாட்கள் மட்டுமே நீடிக்கும். திறக்கப்பட்ட பாலை 2 நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். பால் என்பது சீக்கிரத்திலேயே தயிராக மாற கூடிய மிகவும் சென்சிடிவான பொருட்களில் ஒன்றாகும்.

பாதுகாப்பு பகுதி
இந்த குறைபிரசவ குழந்தை உயிருக்கு போராடுகிறது. தயவுசெய்து உதவுங்கள்

குளிர் சாதன பெட்டியில் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பொருந்தும். குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் தான் அதிக குளிராக இருக்கும். அதனால் சமைத்த உணவை எப்போதுமே பின்புறத்தில் தான் வைக்க வேண்டும். சாஸ், ஊறுகாய்கள், பிரைன் போன்ற பொருட்களை முன்பக்கமாக வைக்க வேண்டும். அதற்கு காரணம் அவைகளில் பொதுவான அளவில் பதப்பொருள் உள்ளது.

குளிரூட்டப்பட்டஉணவு ஆரோக்கியமானதா? மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உணவுகளை உட்கொண்டு விட்டால் அது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எவ்வளவு சீக்கிரமாக காலி பண்ணுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு நல்லது. ஆனால் நற்பதமான சமைத்த உணவு தான் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது தான் எங்களின் கருத்து. அது பாதுகாப்பானது மட்டுமல்லாது சுவையாகவும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button