பிற செய்திகள்

1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக,, இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா..

மலையாளத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான ஜே. ஏ. ஆர். ஆனந்தின் மகள். மலையாள திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானார். மாட்டொரு சீதா என்ற மலையாள படத்தில் நடித்தார்.

1987ஆம் ஆண்டில் உப்பு என்னும் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
78uoippl
மலையாளத்தை தொடர்ந்து தமிழில் முதல் என்ட்ரி 1982ல் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படம் தான். தொடர்ந்து நினைவெல்லாம் நித்யா, கைதியின் தீர்ப்பு, சின்ன பூவே மெல்ல பேசு, என்னை விட்டு போகாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். திரைக்கு வராத கதை, தகடு, இத்தனை நாளாய் எங்கிருந்தாய் போன்ற படங்களில் இன்றைய நாயகர்களுடனும் நடித்துள்ளார். தெலுங்கிலும் இரண்டு படங்கள் நடித்துள்ளார். மலையாளத்தில் 1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ளார். 4 மொழிகளிலும் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் இவர் முதன்முதலில் டிடி மெட்ராஸ் சேனலில் 1991ல் வெளியான கடல்புரத்தில் என்ற சீரியலில் நடித்தார். பிறகு ராஜ்டிவியில் ரயில் ஸ்நேகம் என்ற தொடரில் நடித்தார். சன்டிவியின் கோகிலா எங்கே போகிறாள் தொடர்தான் இவரை தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஃபேமஸ் ஆக்கியது. தொடர்ந்து விஜய்டிவியின் காவ்யாஞ்சலி, ஏசியாநெட் சேனலில் ஓமனந்திங்கள் பக்ஷி, சினேக கூடு, சன்டிவியின் சொர்க்கம், கோலங்கள், பெண், ராஜ ராஜேஸ்வரி, சிவசக்தி போன்ற தொடர்களில் நடித்தார். பின்னர் சன்டிவியின் தியாகம், பிள்ளை நிலா சீரியலில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது தெய்வமகள் சீரியல்தான். அதில் சரோஜாவாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார்.

பின்னர் விஜய்டிவியின் மாப்பிள்ளை சீரியலில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1ல் அரவிந்த்தின் அம்மா கௌரி விஸ்வநாதனாக நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்2வில் நாச்சியார் கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஜீ தமிழின் ரெட்டை ரோஜா சீரியலிலும் நடித்து வருகிறார். திரைத்துறை மற்றும் சின்னத்துரையில் இவரது சிறப்பான நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். தமிழ், மலையாள மொழிகளில் சீரியல், திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் என பிசியாக இருக்கிறார் இந்த 80’s கதாநாயகி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button