தாய்ப்பாலால் தாய்க்கு நன்மை

ld9தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல் எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது. உடல் எடை குறைவது தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேருக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்க உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது என நம்பப்படுகிறது நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்க்கூறிய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. தாய்ப்பால் கொடுப்பது வசதியானது, சுகாதாரமானது. தாய்ப்பால் எல்லாவற்றிலும் சிறந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்சேய் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்பட உதவிசெய்கிறது. தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் அந்த அணைப்பு பிள்ளைக்கு மிகவும் ஆறுதலையும் தேறுதலையும் ஏற்படுத்தும் ஒரு சிறந்த வழி.

Leave a Reply