ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…இலவங்கப் பட்டையின் 20 மருத்துவ குணங்கள்!!!

இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மூலிகைகள் என்றாலே அதில் நிறைய ஆரோக்கிய நலன்கள் அடங்கியிருக்கும். பட்டையின் சிறப்பு என்னவெனில், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பதே ஆகும். இலவங்கப்பட்டை வீட்டு மருந்தாக மட்டுமின்றி அழகை மேம்படுத்த உதவுவதிலும் நல்ல பயன் தருகிறது.

எந்த ஒரு நற்குணம் வாய்ந்த மருந்தாக இருந்தாலும், அதை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் உட்கொள்வது தவறு. அதில் இருந்து இலவங்கப் பட்டை வேறுப்பட்டதல்ல. ஒருவேளை சிலர் ஏதேனும் மருந்துகள் உட்கொண்டு வருபவர்களாக இருந்தால். இலவங்கப் பட்டையை உட்கொள்வதை, உங்களது மருத்துவ ஆலோசகரிடம் பரிசீலித்தப் பின்பு எடுத்துக் கொள்வது நல்லது. சரி வாருங்கள் தற்போது பட்டையில் உள்ள மருத்துவ நற்குணங்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்…

குடல் நோய் எரிச்சல்

குடல் நோய் மற்றும் அதன் மூலம் வரும் எரிச்சல்களை பட்டையின் மருத்துவ குணம் கட்டுப்படுத்துகிறது. மற்றும் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை இரைப்பை குடலில் தங்கும் நச்சுப் பூச்சிகளை அழித்து இரைப்பை குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

மூட்டு வலி

இலவங்கப் பட்டை மூட்டு வலி உள்ள நோயாளிகளுக்கு நல்ல தீர்வளிகிறது. இலவங்க பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்வது மற்றும் பட்டையை தேநீரில் கலந்து குடிப்பது போன்றவை நல்ல பயனளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. போதிய ஆதாரங்கள் இல்லாத போதிலும் பாட்டிக் காலத்து வைத்தியமான இது நல்ல பயனளிப்பதாக கூறப்படுகிறது.

ஈஸ்ட் தொற்று நோய்

ஈஸ்ட் தொற்று நோய்கள் வரும் போது, தொற்று ஏற்பட்ட இடங்களில் இலவங்கப் பட்டை எண்ணெய்யை உபயோகப்படுத்தினால் நோய் தொற்று குணமாகும்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலங்கைப் பட்டை வெகுவாக பயனளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு இது நல்ல பயன் தருகிறது.

ஆன்டி-பாக்டீரியல்

இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி- பாக்டீரியா தன்மை அடங்கி இருப்பதால், இது பாக்டீரியா சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. உங்களுக்கு தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தால் இனிமேல் இலவங்கப் பட்டை தேநீர் அருந்துங்கள் இது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

புற்றுநோய் கட்டி உருவாகாமல் இருக்க இலவங்கப் பட்டை நல்ல முறையில் பயன் தருகிறது. சில மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் நாம் அறிவது என்னவெனில் இது சில வகையான புற்றுநோய்கள் நம்மை தாக்காது இருக்க உதவுகிறது.

கிருமி நாசினி

இலவங்கப் பட்டையில் நுண்ணுயிர் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உள்ளது. அதனால் இது ஒரு நல்ல கிருமி நாசினியாக பயன் தருகிறது. உங்களது சமையல் அறைத்திட்டு அல்லது வீட்டு தரைகளை துடைக்கும் போது நீரில் சில துளிகள் இலவங்கப் பட்டை எண்ணெய்யை கலந்து துடைத்தால் நல்ல பயனளிக்கும்.

உஷார்நிலை

இலவங்கப் பட்டை கலந்த தேநீர் பருகும் போது உங்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் விழிப்புடனும் செயல்படுகிறது. இதனால் நீங்கள் உங்களது அலுவலகத்தில் சோர்வு ஏற்படாமல் நன்றாக வேலை செய்ய முடியும்.

நாற்றம்

முன்பு சொன்னது போலவே, நீங்கள் உங்களது வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் போது நீரில் சில துளிகள் இலவங்கப் பட்டை எண்ணெய்யை கலந்து உபயோகப்படுத்துவதினால் துர்நாற்றம் வீசாது. ஏனெனில் பட்டையில் உள்ள நல்ல மனம் நாற்றம் ஏற்படாமல் இருக்கு உதவுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

நமது உடல்நலத்தை நல்ல முறையில் பேணிக் காக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் பங்கு பெருமளவில் பயனளிக்கிறது. இலவங்கப் பட்டையில் இருக்கும் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் உடல்நலம் என்றும் ஆரோக்கியமாக இருக்கு உதவிகிறது.

பாதுகாப்பு

இலவங்கப் பட்டையில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியா தன்மை பாக்டீரியாக்களை எளிதில் அண்டாமல் இருக்க உதவுகிறது. இதனால் பட்டையை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க வைக்கலாம்.

மசாஜ்

நீங்கள் பொதுவாக உபயோகப்படுத்தும் மசாஜ் செய்யும் எண்ணெயில் சிறிதளவு இலவங்கப்பட்டை எண்ணெய்யை கலந்து பயன்படுத்தினால், உங்களது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

பூச்சிகளை விரட்டும்

இலவங்கப்பட்டை எண்ணெய்யை உபயோகப்படுத்துவதின் மூலம் பூச்சிகளையும், கரப்பான்களையும் விரட்டி அடிக்கலாம். மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால், பேன் தொல்லையில் இருந்தும் தீர்வு பெறலாம்.

உடல் எடை

இலவங்கப்பட்டை நமது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் நமது உடல் பருமனை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் தடுக்கிறது.

பல் பிரச்சனை

இலவங்கப் பட்டை பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் [பிரட்சனைளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. மற்றும் வாய் திர்நாற்றத்தையும் குறைக்கிறது.

அழகு

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல் அழகு பெறவும் உதவுகிறது இலவங்கப்பட்டை. இதை உச்சந்தலையில் உபயோகப்படுத்துவதன் மூலம் பொடுகுத் தொல்லை தீரும். மற்றும் நல்ல சருமம் பெறவும் நிறைய மக்கள் பட்டையை பயன்படுத்துகின்றனர்.

மாதவிலக்குக்கு முன் வரும் நோய்க்குறி

இலவங்கப்பட்டையில் இருக்கும் மாங்கனீசின் நற்குணம் மாதவிலக்குக்கு முன் வரும் நோய்க்குறிகளில் இருந்து பாதுகாப்பாய் இருக்க உதவுகிறது.

இதயம்

நல்ல ஆரோக்கியமான இதயம் பெற இலவங்கப்பட்டை உதவுவதாகவும் மற்றும் இதயம் சார்ந்த கோளாறுகளுக்கு தீர்வளிப்பதாகவும் பாட்டி வைத்தியம் காலத்திலிருந்தே சொல்லப்படுகிறது.

பூஞ்சை

இலவங்கப்பட்டையில் இருக்கும் பூஞ்சைக் கொல்லி குணம், நமக்கு ஏற்படும் சிறு சிறு பூஞ்சைப் பிரச்சனைகளுக்கு நல்ல தேர்வு தருகிறது. இது இலவங்கப்பட்டையின் ஒரு நல்ல மருத்துவ குணம் ஆகும்.

மன அழுத்தம்

இலவங்கப்பட்டை எண்ணெயின் நறுமணம் நமது கவலையை போக்கி, நமது மனநிலையை மேலோங்க செய்ய உதவுவதாய் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button