இனிப்பு வகைகள்

பால் கொழுக்கட்டை

சாதாரண கொழுக்கட்டையாவே சாப்பிடுறதுக்கு போரடிக்குதா. இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க! மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும். சிறுசு, பெருசு என அனைவரின் நாவையும் சுண்டி இழுக்கும் இந்த ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி மாவு – 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) – 1 கப்
அடுத்ததாக எடுக்கும் தேங்காய்ப்பால் – தேவைக்கு
பால் – 3 கப்
சர்க்கரை – 2 1\2 கப்
ஏலக்காய் – 4
முந்திரி, திராட்சை – தேவைக்கு
நெய் – 5 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சவும்.

* அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

* சிறிது உப்பு சேர்க்கவும்.

* பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும்.

* பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.

* சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.

* பின்னர், பால், தேங்காய்ப்பால் – இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு இறக்கி வைக்கவும்.

* நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியோ ருசி!
Milk Kolukattai14 jpg 853
இதன் சிறப்பு:

* ஆவியில் வேக வைத்ததால் உடல்நலத்துக்கு உகந்தது.

* தேங்காய்ப்பால், பால் கலவையுடன் ஏலக்காய், நெய் வாசனை சேர்ந்து சாப்பிடத் தூண்டும்.

* பாயசங்களையே மாற்றி மாற்றி வைக்காமல் இப்பழமையான பால் கொழுக்கட்டை செய்தும் விருந்தினரை வியக்க வைக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button