ஆரோக்கிய உணவு

காலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடுமா என்று தானே? உண்மையிலேயே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிரம்புவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

இன்று பலருக்கும் காலையில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் சமைத்து காலை உணவை சாப்பிட நேரம் இல்லாமையால், ஏராளமானோர் முக்கியமான காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள்.

Amazing Health Benefits of Eating Banana For Breakfast Everyday
இப்படி ஒருவர் காலை உணவைத் தவிர்த்தால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும். சிலருக்கு வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.

ஆனால் சில ஆய்வுகள் வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறது. உங்களுக்கு காலை உணவாக ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

கலோரி குறைவு

வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகமான கலோரியை உட்கொண்டோமா என்ற ஓர் உணர்வைத் தவிர்க்கலாம். அதோடு காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, அது வேலை நேரத்தில் கண்ட உணவுகளின் மீதுள்ள ஆவலைத் தடுக்கும்.

செரிமானம் மேம்படும்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. சொல்லப்போனால் வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு நண்பன் போன்றது. இது எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். ஆகவே வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுகிறோமே என்ற ஓர் எண்ணம் எழுந்தால், அதை விட்டொழியுங்கள். வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு கடுமையான வேலையைக் கொடுக்காமல், அதற்கு மாற்றாக செரிமான மண்டலத்திற்கு ஒரு வகையான உயவுப் பொருளை வழங்கும்.

காலைச் சோர்வு

சுவையான மற்றும் மென்மையான வாழைப்பழம், செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும்.

புரோபயோடிக்

வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது. ஆகவே அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால், அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும் வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்யும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மலச்சிக்கல்

வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்த உதவும். குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

சுத்தமான குடல்

வாழைப்பழத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளுள் ஒன்று இது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவரது செரிமான மண்டலம் சுத்தமாக இருந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முறையாக உறிஞ்சப்படும். அதோடு வாழைப்பழத்தில் அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, ஃபுருக்டோஸ் உள்ளது. இச்சத்துக்கள் இரைப்பைக் குடல் பாதையை சிறப்பாக உணர வைக்கும்.

எடை குறைவு

எடையைக் குறைக்க நினைப்போரது டயட்டில் வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இது வயிற்றை நிரப்புவதோடு, எளிதில் செரிமானமாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலாக மாற்றப்பட்டு, வயிற்றை நிரப்பும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். அதிலும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆற்றல்

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்ற உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இத்தகைய பழத்தை காலை உணவாக ஒருவர் உட்கொண்டால், அது உடலுக்கு நல்ல ஆற்றலை கிடைக்கச் செய்வதோடு, மதிய உணவு வரை பசி எடுக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

சிறப்பான மனநிலை

நீங்கள் அடிக்கடி மனநிலையில் ஏற்றஇறக்கங்களை சந்திக்கிறீர்களா? வாழைப்பத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன், மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். எப்படியெனில் வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் செரடோனினாக மாற்றப்படும். இந்த செரடோனின் என்னும் ஹார்மோன், மூளைக்கு சந்தோஷமான உணர்வை வழங்கும். இதன் மூலம் வாழைப்பழம் ஒருவரது மனநிலையை சிறப்பாக்கும். ஆகவே நல்ல மனநிலையில் ஒரு நாளைத் தொடங்க நினைத்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

PMS அறிகுறிகள்

வாழைப்பழம் பெண்கள் சந்திக்கும் PMS அறிகுறிகளைக் குறைக்கும். அதாவது வாழைப்பழம் ஒரு பெண் இறுதி மாதவிலக்கை நெருங்கும் முன் ஒருசில பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று தான் ஏற்றஇறக்க மனநிலை. இந்த நிலையைத் தவிர்க்க பெண்கள் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட, இந்த பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

மூளை செயல்பாடு

வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் இருக்கும். சில ஆய்வுகள் பொட்டாசியம், மூளையின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது என கூறுகிறது. ஆகவே வாழைப்பழத்தை உங்கள் குழந்தைகள் தேர்வு எழுத செல்வதற்கு முன் கொடுங்கள். இதனால் அவர்களது மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும்.

வீக்கம்

சிலருக்கு காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்தால், முகம், கண்கள் அல்லது பாதங்கள் வீங்கி காணப்படும். இப்படி வீக்கமடைவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட் அல்லது பழக்கம் தான். ஆனால் ஒருவர் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உடனே வீக்கத்தைக் குறைத்துவிடும்.

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் என்பது தெரியுமா? ஏனெனில் வாழைப்பழம் இரத்த சோகையை சரிசெய்யும் இரும்புச்சத்தை வழங்குகிறது. அதோடு, வாழைப்பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இரத்த அழுத்தம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வலிமையான எலும்புகள்

வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும். அதோடு, வாழைப்பழத்தில் வளமான அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை எலும்புகளை வலிமையாக்கத் தேவையான சத்துக்களாகும். ஆகவே உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

இதர நன்மைகள்

வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகளாவன:

* இயற்கை ஆன்டாசிட்

* வயிற்று அல்சருக்கு நிவாரணம் அளிக்கும்.

* உடல் சுத்தமாகும்.

* தசை பிடிப்புகள் தடுக்கப்படும்.

* சிறுநீரக புற்றுநோய் தடுக்கப்படும்.

* மாகுலர் திசு சிதைவு பிரச்சனை தடுக்கப்படும்.

* மெட்டபாலிசம் மேம்படும்.

எச்சரிக்கை

வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடும் முன், அதனால் விளைவும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதில் ஒன்று தான் இது இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும். வாழைப்பழம் இனிப்பான ஓர் பழம் என்பது தெரியும். இதில் அதிகளவிலான ஃபுருக்டோஸ் உள்ளது. இதனை பிரச்சனை இல்லாத ஆரோக்கியமானவர்கள் சாப்பிடலாம். ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button