Other News

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்

ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளை விடுவிக்கும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போருக்கு 100 நாட்கள் ஆன நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் ஹமாஸ் வசம் வைத்திருக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கான திட்டங்களை அறிவித்துள்ளதாக NBC செய்தி நிறுவனத்திடம் நம்பிக்கையான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த உடன்படிக்கையை பொறுத்த வரையில் இன்று ஹமாஸ் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

24 65b7e51306a01
கத்தார் பிரதமர் மற்றும் பல்வேறு நாடுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். ஹமாஸ் படைகள் போர்நிறுத்தம் மற்றும் அத்தியாவசிய உதவிகளை உறுதிப்படுத்துவதற்கு ஈடாக பணயக்கைதிகளை விடுவிக்க கோருவதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் இருக்கும் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

கடந்த நவம்பரில், 100 இஸ்ரேலிய பணயக்கைதிகளும், 240 பாலஸ்தீனியர்களும் பேச்சுவார்த்தை மூலம் விடுவிக்கப்பட்டனர்.

 

எனினும், இந்த போர்நிறுத்தம் ஒரு வாரத்தில் முறிந்தது. தற்போது காசாவில் 100 பணயக்கைதிகளை ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button