சைவம்

தர்பூசணிக் கூட்டு

தேவையானவை: சிறிய தர்பூசணி – 1, தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப்.

செய்முறை: தர்பூசணியின் தோல் சீவி, வெள்ளைப் பகுதியைப் பொடியாக நறுக்கி, உப்பு, பருப்பு சேர்த்து, நன்றாக வேகவைக்கவும். இதில், தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகத்தை அரைத்து விட்டு, எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: தர்பூசணியின் சிவப்புப் பகுதியை ஜூஸாக சாப்பிடலாம். வெள்ளைப் பகுதியில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.
பலன்கள்: நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. கலோரி இல்லை. புரதமும் சிறிதளவு கிடைப்பதால், வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
p86

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button